கலிபோர்னியா,
நாசா அனுப்பிய இன்சைட் விண்கலம் 6 மாத பயணத்திற்குப் பிறகு செவ் வாய்க்கிரகத்தில் வெற்றிகரமாக தரை இறக்கப்பட்டதற்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வாழ்த்து தெரிவித்தார்.அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ முடியுமா? என ஆய்வு மேற்கொண்டு வருகிறது.
கடந்த 1997ஆம் ஆண்டு நீர் ஆதாரத்தை கண்டறிய ‘யத்பைண்டர்’ என்ற விண் கலத்தை அனுப்பியது. 2003ஆம் ஆண்டில் ‘பீகிள் 2’ என்ற விண்கலத்தை அனுப்பி ஆய்வு மேற்கொண் டது. 2004ஆம் ஆண்டில் ‘ரோவர்’ என்ற விண் கலத்தை அனுப்பி அங்கு தரை இறங்கி நீர் உள்ளதா என ஆய்வு மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், செவ்வாய் கிரகத்தின் உள்பகுதியில் தீவிர ஆராய்ச்சி மேற்கொள்ள ‘இன்சைட்’ என்ற செயற்கைக் கோளை அனுப்பியுள்ளது.
கடந்த மே 5ஆம் தேதி அமெரிக்காவின் கலிபோர்னியாவில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. அது 6 மாதங்களாக பயணம் மேற்கொண்டது. 50 கோடி கி.மீ. தூரம் கடுமையான பயணத்துக்குப் பிறகு இன்று இந்திய நேரப்படி அதி காலை 1.30 மணிக்கு தரை இறங்கியதும் முதல் போட் டோவை பூமிக்கு அனுப் பியது. இந்த விண்கலம் செவ்வாய் கிரகத்தின் தட்ப வெப்ப நிலை, அதன் தன்மை குறித்து ஆய்வு மேற்கொள்ளும். அத்துடன் தண்ணீர் இருக்கிறதா என்பதையும் தீவிரமாக ஆராயும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் முன்பே முஷரப் இறந்துவிட்டால், அவரது
மேலும்Facebook Twitter Mail Text Size Printஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பதவி நீக்க கோரும்
மேலும்