இத்தாலியில் இளம் பெண் ஒருவர் தனது 8 வயது மகனை கொடூரமாக கொலை செய்து உடலை பொட்டல் காட்டில் புதைத்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இத்தாலியின் சிசிலி பகுதியில் குடியிருந்து வருபவர் வெரோனிக்கா. இவரது மகன் லாரிஸ் தான் கொல்லப்பட்ட சிறுவன். இவருக்கும் இவரது மாமனாருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருப்பதாகவும் அவருடன் வெரோனிக்கா பாலியல் உறவில் ஈடுபட்டதை சிறுவன் லாரிஸ் தெரிந்து கொண்டதால் அவனை கொலை செய்ததாகவும் வெரோனிக்கா தெரிவித்துள்ளார். ஆனால் தனது மருமகளுடன் அப்படி ஒரு எண்ணம் தமக்கு இல்லை என்றும் அவர் பொய் சொல்கிறார் எனவும். உண்மையான காரணத்தை விசரணை அதிகாரிகள் கண்டு பிடிக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.மட்டுமின்றி தமது மருமகள் மீது இந்த விவகாரம் தொடர்பாக புகார் அளிக்க இருப்பதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். சம்பவத்தின்போது தமது மகனை காணவில்லை என்று வெரோனிக்கா தேடியுள்ளார். சிறுவனை எவரோ கடத்தி சென்றுள்ளதாக அவர் சந்தேகம் தெரிவித்துள்ளார்.மட்டுமின்றி சிறுவனை பாடசாலையில் காலை நேரம் கொண்டு விட்டதாகவும், ஆனால் மலையில் பாடசாலை சென்று தேடியபோது சிறுவன் அங்கு இல்லை எனவும் அவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். ஆனால் பொலிஸார் இவர் கூறிய கதையை நம்பவில்லை. காரணம், பாடசாலையில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கமெராக்களில் அதுபோன்ற காட்சி எதுவும் குறித்த நாளில் பதிவாகவில்லை.தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் அவர் உண்மையை ஒப்புக்கொண்டார். தமது மாமனாருடன் ஏற்பட்ட தொடர்பு காரணமே தாம் மகனை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளதாகவும், அருகாமையில் உள்ள பொட்டல்காட்டில் உடலை புதைத்துள்ளதாகவும் அவர் ஒப்புக்கொண்டார். ஆனால் வெரோனிக்காவின் மாமனார் இந்த குற்றச்சாட்டை அடியோடு மறுத்துள்ளார். தமக்கு மிகவும் பிடித்தமான தமது பேரனை தாம் இழந்து விட்டதாகவும், குறித்த சம்பவம் தொடர்பாக தம்மீது அபாண்ட பழியை சுமத்துவதாகவும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.இந்த வழக்கு விசாரணையின் முடிவில் வெரோனிக்காவின் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்