கொழும்பு,
தமிழ் மக்களின் விடுதலைக்கான போராட்டத்தில தமது இன்னுயிரை நீத்த மாவீரர்களை நினைவுகூருவதற்கு மைத்திரி - மஹிந்த தலைமையிலான அரசாங்கம் ஒருபோதும் அனுமதிவழங்கவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.அக்டோபர் 26 ஆம் திகதி அதிபர் மைத்ரிபால சிறிசேனாவினால் அதிரடியாக மகிந்த ராஜபக்சே பிரதமராக நியமிக்கப்பட்டதை அடுத்து மைத்திரி - மகிந்த அரசாங்கத்தின் அரச தகவல் திணைக்களத்தின் பணிப்பாளராக நியமிக்கப்பட்ட நாலக்க களுவெவ நேற்று வெளியிட்டுள்ள அவசர செய்திக்குறிப்பிலேயே இந்த தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
தமிழ் மக்களின் விடுதலைக்கான போராட்டத்தில தமது இன்னுயிரை நீத்த மாவீரர்களைகௌரவிக்கும் வகையில் ஒவ்வொரு வருடமும் நவம்பர் 27 ஆம் திகதி அனுட்டிக்கப்படும் மாவீரர் தினத்தை இம்முறை தமிழர் தாயகமான வடக்கு கிழக்கில் பெரும் எடுப்பில் அனுட்டிப்பதற்குஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
நவம்பர் 21 ஆம் திகதி புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கை நவம்பர் 23 ஆம் திகதி வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்திருந்த யாழ்நீதவான் சதீஸ்கரன், நிபந்தனையுடன் கோப்பாய் துயிலும் இல்லத்திற்கு எதிரில் மாவீரர் தினத்தைஅனுட்டிக்க அனுமதி வழங்கினார்.இதற்கமைய தமிழீழ விடுதலைப் புலிகளை அடையாளப்படுத்தும் எந்தவொருஅடையாளங்களையும், தனித் தமிழீழ வரைபடத்தையும் காட்சிப்படுத்தக் கூடாது என்று உத்தரவிட்ட நீதவான், இது குறித்து ஆராய்ந்த நீதிமன்றத்திற்கு அறிக்கையொன்றைசமர்ப்பிக்குமாறு கூறி நவம்பர் 29 ஆம் திகதிக்கு வழக்கை ஒத்திவைத்தார்.
நீதிமன்றத்திலும், நீதிமன்றத்திற்கு வெளியிலும் வைத்து தாம் மாவீரர்நாளை அனுட்டிப்பதை எதிர்க்கவில்லை என்று கூறியிருந்த யாழ்ப்பாணம் கோப்பாய் போலீசார், தமிழீழ விடுதலைப் புலிகளை மீள உருவாக்கும் வகையில் அவர்களின் அடையாளங்களை காட்சிப்படுத்துவதையே தடுக்க நட வடிக்கை எடுத்திருந்ததாக கூறியிருந்தனர்.
இந்தத் தகவல்கள் கொழும்பிலுள்ள சிங்கள ஊடகங்களிலும், இணையத் தளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து நாட்டில்அரசாங்கமொன் இல்லாத நிலையில், தானே பிரதமர் என்றும், தாங்களே அரசாங்கம் என்றும் கூறிக்கொண்டிருக்கும் மகிந்த ராஜபக்சே மற்றும்அவரது விசுவாசிகளினால் அரச தகவல் திணைக்களத்திற்கு கடந்த அக்டோபர் 27 ஆம் திகதி நியமிக்கப்பட்ட பணிப்பாளர் நாயகம் அவரச செய்திக்குறிப்பை வெளியிட்டிருக்கின்றார்.
இதில் அரசாங்கம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மாவீரர் நாளை அனுட்டிக்கஅனுமதி வழங்கவில்லை என்று அடித்துக் கூறியுள்ள அரச தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம்நாலக்க களுவெவ, மாவீரர் நாளை அனுட்டிக்க அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாக மேற்கொள்ளப்படும் பிரசாரங்க ளில் உண்மை இல்லை என்றும் தெரிவித்திருக்கின்றார்.
இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத
மேலும்அங்கஜன் இராமநாதன் கோரிக்கை
மேலும்ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால
மேலும்அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்
மேலும்