கொழும்பு,
புதியபிரதமரை நியமிக்கத் தயாராக இருப்பதாக, ஸ்ரீலங்கா அதிபர் மைத்திரிபாலசிறிசேனா தெரிவித்துள்ளார்.கொழும்பு ஊடகமொன்றுக்கு வழங்கிய செய்தியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்ற நிலையியல் கட்டளைகளுக்கு அமைய பெரும்பான்மையை நிரூபித்தால், புதிய பிரத மரை நியமிக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஸ்ரீலங்காவின் பிரதமராக மகிந்த ராஜபக்சே நியமிக்கப்பட்டதன் பிற்பாடு நாட்டில் அரசியல் குழப்பம் நிலவி வருகின்றது. இந்தநிலையில், மகிந்த ராஜ பக்சேவுக்கு பெரும்பான்மைஇருந்தால் அவர் எந்த தடையுமின்றி பிரதமராக நீடிக்கலாம் என்றும், அவருக்கு பெரும்பான்மை பலம் இல்லை என்று நிரூ பிக்கப்பட்டால், அவர் ஒரு முடிவை எடுப்பார் என்று நம்புவதாகவும் மைத்திரிபால சிறிசேனா குறிப்பிட்டுள்ளார்.
ரணில்விக்கிரமசிங்கேவை மீண்டும் பிரதமராக நியமிப்பதற்கு வாய்ப்பு இல்லை என்றும் தானே பதவியில் இருந்து நீக்கி விட்டு, அவரை நியமிக்க முடி யாது என்பதில் உறுதியாக இருப்பதாகவும் அதிபர் கூறியுள்ளார்.நாடாளுமன்றத்தில்பெரும்பான்மையைக் காட்டும் போது, கட்சித் தலைவர்கள் இணைந்து பணியாற்றவேண்டிய பொறுப்பு உள்ளதாகவும் 225 பேரைக் கொண்ட சபையில் யாருக்கு பெரும்பான்மை உள்ளதோ அவர் பிரதமராக இருப்பார் என்றும் அதிபர் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத
மேலும்அங்கஜன் இராமநாதன் கோரிக்கை
மேலும்ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால
மேலும்அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்
மேலும்