அவுஸ்திரேலியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகள் உள்ளிட்டவர்கள் கம்போடியாவில் குடியமர்த்தப்படுவதற்கு அந்நாட்டு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவிப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. முன்னதாக அவுஸ்திரேலியாவின் நவுரு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரு இலங்கை அகதிகள் உள்ளிட்டவர்கள் கம்போடியாவில் குடியேறுவதற்கு விருப்பம் தெரிவித்திருந்தனர்.இந்நிலையில், குறித்த அகதிகள் கம்போடியாவில் குடியமர்த்தப்படுவதற்கு அந்நாட்டு மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சட்டவிரேதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்கு புகலிடம் கோரி வருபவர்களை கட்டுப்படுத்தும் நோக்கில் அவுஸ்திரேலிய அரசாங்கம் அகதிகளை திருப்பி அனுப்பி வருகின்றது.அத்துடன், அந்நாட்டில் தடுத்து வைக்கப் பட்டுள்ள அகதிகளையும் வெளியேற்றும் முயற்சியில் அவுஸ்திரேலியா அரசாங்கம் தீவிரமாக செயற்பட்டு வருகின்றது. இந்நிலையில், இலங்கை அகதிகள் உள்ளிட்டவர்கள் அவுஸ்திரேலியாவில் இருந்து வெளியேறுவதற்கு விருப் பம் தெரிவித்துள்ள நிலையில், அவர்களை கம்போடியாவில் குடியமர்த்துவதற்கு அவுஸ்திரேலியா அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டிருந்தது. எனினும், தற்போது குறித்த அகதிகள் கம்போடியாவில் குடியமர்த் தப்படு வதற்கு அந்நாட்டு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக குறிப்பிட்படுகின்றது. கம்போடியாவில் உள்ள பெரும்பான்மையான மக்கள் வறுமை நிலையில் இருக்கும் நிலையில், அங்கு அகதி கள் குடியமர்த்தப்படுவதை ஏற்க முடியாது என அந்நாட்டு மக்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை, கம்போடியா சென்றுள்ள மூன்று அகதிகள், அவர்களின் சொந்த நாடுகளுக்கு திரும்பிச் செல்வதாக கூறியுள்ள நிலையில், கம்போடியாவின் பொருளாதார நிலை சிறப்பாக இல்லை என்பதையும் எடுத்து காட்டுகின்றது. மேலும், வன்முறையில் இருந்து மீண்டுள்ள கம்போடிய, சமூக நிலையிலோ பொருளாதார நிலையிலோ மாற்றம் இதுவரை ஏற்படவில்லை என கூறப்படுகின்றது.இவ்வாறான பின்னணியில், கம்போடியாவில் அகதிகள் குடியமர்த்தப்படுவதற்கு அந்நாட்டு மக்கள் எதிரப்பு தெரிவித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத
மேலும்அங்கஜன் இராமநாதன் கோரிக்கை
மேலும்ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால
மேலும்அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்
மேலும்