விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு மரணசான்றிதழ் வழங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தால் முடியாது போயுள்ளது.எனினும், நல்லாட்சி அரசாங்கத்தில் அதற்கான செய்பாடுகளை முன்னெடுக்க முடியும் என முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். கடந்த 2009ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டதாக இலங்கை அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டது.எனினும், அவர் உயிரிழந்தமைக்கான சான்றுகளை வழங்க இலங்கை அரசாங்கம் தவறியுள்ளது. பிரபாகரன் உயிரிழந்தமைக்கான சான்று ஏன் வழங்கப்படவில்லை என சர்வதேச ரீதியில் சர்ச்சை எழுந்துள்ளது. இந்நிலையில், தமிழ் ஊடகவியலாளர்களை நேற்று சந்தித்த போது பசில் ராஜபக்விடம், குறித்த விடயம் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை, குறித்த விடயம் தொடர்பில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்துடன் இணைந்து செயற்படலாம் எனவும், அவர் கூறியுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டு வருவதால், பிரபாகரனுக்கு மரண சான்றிதழ் வழங்கும் செயற்பாட்டை எளிதாக முன்னெடுக்க முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத
மேலும்அங்கஜன் இராமநாதன் கோரிக்கை
மேலும்ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால
மேலும்அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்
மேலும்