கொழும்பு,
சர்ச்சைக்குரிய பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலக மறுத்து வரும் நிலையில் பிரதமர் செயலகத்தை செயல்பட விடாமல் முடக்கும் புதிய நகர்வு ஒன்றில் ஐக்கிய தேசியக் கட்சி இறங்கியுள்ளது. பிரதமர் செயலகத்துக்கான நிதி ஒதுக்கீட்டை இடைநிறுத்தும்தீர்மானத்தை ஐக்கிய தேசியக் கட்சி நேற்று நடந்த கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் முன் வைத்துள்ளது.
இந்த தீர்மானம் நாடாளுமன்ற கேள்வி பதிலில் சேர்த்துக் கொள்ளப்பட்டு, வரும் 29ஆம் தேதி விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்ப டுகிறது.
அரசாங்க நிதி ஒதுக்கீடுகளை நாடாளுமன்றமே கட்டுப்படுத்துகிறது. அந்த வகையில் மகிந்த ராஜபக்சேவின் செயலகம் மற்றும் பணியாளர்களுக்கான நிதி ஒதுக்கீடுகளை இடைநிறுத்தும் தீர்மானத்தை நிறைவேற்றுவதன் வழி தனது பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க ஐக்கிய தேசியக் கட்சி திட்ட மிட்டுள்ளது. ஐதேகவின் இந்த நடவடிக்கை மகிந்த ராஜபக்சே அரசாங்கத்துக்குப் புதிய நெருக்கடிகளை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத
மேலும்அங்கஜன் இராமநாதன் கோரிக்கை
மேலும்ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால
மேலும்அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்
மேலும்