கொழும்பு,
அதிபர் மைத்திரிபால சிறிசேனா, பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகியோரின் அரசியல் சதிக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் தம்பர அமில தேரர் சத்தியாக்கிரகப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளார். இலங்கையில் கடந்த 2015ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ரணில் - மைத்திரி தலைமையிலான நல்லாட்சி கடந்த 26ஆம் தேதி மைத்திரிபால சிறிசேனாவால் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.
அத்துடன், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவை பிரதமராக அறிவித்து பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிலையில், பிரதமர் மகிந்த ராஜ பக்சேவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் இரண்டு முறை நம்பிக்கையில்லாத் தீர்மானம் குரல் வழியான வாக்கெடுப்பு ஊடாக வெற்றிப் பெற்றதாக சபா நாயகர் கரு ஜெயசூரியா தெரிவித்துள்ளார். எனினும் அதனை ஏற்றுக் கொள்ளாத மகிந்த தரப்பினர் நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தார்கள்
இந்நிலையில் அதிபர் மைத்திரிபால சிறிசேனாவுக்கு அழுத்தம் கொடுத்து கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் சத்தியாகிரக போராட்டத்தை முன்னெ டுக்கப் போவதாக அறிவித்துள்ள தம்பர அமில தேரர், கட்சி பேதமின்றி அனைவரையும் இணைத்துக் கொண்டு தொடங்கப்படும் இப்போராட்டத்திற்கு அதிபரிடமிருந்து உரிய பதில் கிடைக்காவிட்டால் சாகும்வரை இப்போராட்டம் தொடரும் என்று எச்சரித்துள்ளார்.
இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத
மேலும்அங்கஜன் இராமநாதன் கோரிக்கை
மேலும்ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால
மேலும்அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்
மேலும்