கொழும்பு,
இலங்கையில் வரும் 2019ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படாத நிலையில் இடைக்கால கணக்கு அறிக்கை ஒன்றைச் சபையில் சமர்ப்பிப்பதற்கு பிரதமர் மகிந்த ராஜபக்சே தரப்பு தீவிரமாகச் செயல்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் அந்த கணக்க றிக்கையை எவ்வாறாயினும் நாடாளுமன்றத்தில் தோற்கடிப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சி கங்கணம் கட்டியுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.
இந்தமாதம் 5ஆம் தேதி வரவு செலவுத் திட்டம் சபையில் சமர்ப்பிக்கப்படவிருந்த நிலையில் அதிபர் மைத்திரிபால சிறிசேனா புதிய பிரதமரைத் தேர்வு செய்து நல்லாட்சி அரசாங்கத்தைக் கலைத்தார். இதனால் புதிய அரசாங்கம் உருவாக்கப்பட்டபோதும் நாட்டில் எழுந்த பல்வேறு அரசியல் நெருக்கடி காரணமாக நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.
எனினும் அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இதுவரை சமர்ப்பிக்கப்படாத நிலையில் நடப்பில் உள்ள அரசாங்கம் அதனை நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்த நிலையிலேயே நாட்டில் தற்போது அரசாங்கம் ஒன்று இல்லை எனக் கூறிவரும் ஐக்கியதேசியக் கட்சியினர் அந்த கணக்கறிக்கையைத் தோற்கடிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத
மேலும்அங்கஜன் இராமநாதன் கோரிக்கை
மேலும்ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால
மேலும்அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்
மேலும்