கொழும்பு,
மகிந்த ராஜபக்சே, நாமல் ராஜபக்சே உள்ளிட்ட பலர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி யில் இருந்து விலகி, பொதுஜன பெரமுன கட்சியில் இணைந்ததால், நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை இழக்கும் நிலைக்குள்ளாகினர்.
சுதந்திர கட்சியில் இருந்து விலகி பொதுஜன பெரமுனவில் உறுப்பினர்களாக இணைந்து கொண்டவர்கள் தற்போது பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்க ளாவர். உச்ச நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவையடுத்து, அண்மையில் அதிபரால் கலைக்கப்பட்ட நாடாளுமன்றம் மீண்டும் கூடியது.
இந்நிலையில் மகிந்த ராஜபக்சே உட்பட 50 க்கும் அதிகமான உறுப்பினர்களின் உறுப்பினர் பதவி நீக்கப்பட வேண்டும் என சட்டவல்லுநர்கள் சுட்டிக் காட்டியதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மகிந்த ராஜபக்சே , நாமல் ராஜபக்சே உட்பட பலர் அதிகாரப்பூர்வமாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தது அதற்கு காரணமா கும் என சட்ட வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதனால் அவர்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர்களாக தொடர்ந்து செயல்பட முடியாது என வும் கூறப்பட்டுள்ளது.
இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத
மேலும்அங்கஜன் இராமநாதன் கோரிக்கை
மேலும்ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால
மேலும்அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்
மேலும்