கொழும்பு,
ஜனநாயகத்திற்கு எதிரான சர்வாதிகாரப் போக்கில் செயல்படும் மனநோயாளியாக அதிபர் மைத்திரிபால சிறிசேனா மாறிவிட்டதாக இலங்கையின் முன்னாள் அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான மங்கள சமரவீர விமர்சித்துள்ளார். மேலும் தன் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை அதிபர் தரப்பினர் விலைபேசிய போது பதிவு செய்யப்பட்ட தொலைபேசி உரையாடல்கள் தம்மிடம் உள்ளதாகவும் அவற்றினை ஊழல் ஆணைக் குழுவில் சமர்ப்பிக்கப் போவதாகவும் மங்கள சமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.
அதிபர் நாட்டு மக்களுக்கு இறுதியாக ஆற்றிய உரை குறித்து, மங்கள சமரவீர ஊடகங்களுக்கு அனுப்பிய அறிக்கையில் இவ்விவகாரங்களைக் குறிப்பிட்டுள்ளார். கடந்த அக்டோபர் 26 ஆம் தேதி அரசியலமைப்புக்கு எதிரான சதியின் பின்னணியாக நாட்டு மக்களுக்கு உரையாற்றி இருந்தார். அதில் பதவிக்காக உண்மைக்கு புறம்பாக பொய்யுரைத்தும் ஜனநாயகத்திற்கு எதிரான சர்வாதிகாரப் போக்கில் செயல்படும் மனநோயாளியாகவும் அதிபர் செயல்பட்டார் என்பது தெளிவாகிறது என சமரவீர தெரிவித்துள்ளார்.
இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத
மேலும்அங்கஜன் இராமநாதன் கோரிக்கை
மேலும்ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால
மேலும்அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்
மேலும்