கொழும்பு,
தமிழீழ விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் அணியினரால் மேற்கொள்ளப்பட்ட கட்டுநாயக்க மீதான தாக்குதலில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கேவுக்குத் தொடர்பு இருப்பதாக கருணா என அழைக்கப்படும் விநாயக மூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
இந்த பரபரப்புத் தகவலை கருணா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். புலிகளுடன் ஒருபோதும் ஒப்பந்தங்களைச் செய்யவில்லை என ரணில் கூறுகிறார். ஆனால் 2001ஆம் ஆண்டு கட்டுநாயக்க விமான நிலைய தாக்குதல் என்ன? அது விடுதலைப் புலிகளுக்கும் சில கொழும்பு அரசியல்வாதி களு க்கும் வெளிநாட்டு புலனாய்வுத்துறைக்கும் இடையிலான உடன்படிக்கையின் பாகமாகுமா? நான் இன்னும் உயிரோடு இருக்கிறேன் என்று முரளிதரன் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் முன்னாள் அமைச்சரான விநாயகமூர்த்தி முரளிதரன் தமிழீழ விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டத்தின் சிறப்புத் தளபதியாயிருந்து பிரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத
மேலும்அங்கஜன் இராமநாதன் கோரிக்கை
மேலும்ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால
மேலும்அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்
மேலும்