வெள்ளி 18, அக்டோபர் 2019  
img
img

தந்தையை கைவிட்டு மகிந்தவுடன் இணையும் மைத்திரி மகள் 
செவ்வாய் 13 நவம்பர் 2018 13:23:02

img

கொழும்பு, 

அதிபர் மைத்திரிபால சிறிசேனாவின் மகள் சத்துரிக்கா சிறிசேனா இம்முறை பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தந்தை மைத்திரிபால சிறிசேனாவின் தேர்தல் தொகுதியான பொலநறுவையில் சத்துரிக்கா போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

மகிந்த ராஜபக்சே தலைமையேற்கும் பொதுஜன முன்னணி கட்சியின் இணைந்து சத்துரிக்கா சிறிசேனா போட்டியிட தீர்மானித்துள்ளதாக அதிபர் செயலக தகவல் வட்டாரங்களை அடிப்படையாகக் கொண்டு சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. சத்துரிக்காவின் ஆலோசகரின் அறிவுரைக்கேற்ப இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

ஸ்ரீலங்கா சுதந்திரா கட்சியில் இம்முறை போட்டியிடும் உறுப்பினர்கள் வெற்றி பெற முடியாத நிலை காணப்படுவதாக ஆலோசகர்கள் சுட்டிக் காட்டி யுள்ளனர். பொதுஜன முன்னணி கட்சியில் இணைந்து தேர்தலில் போட்டியிடுவதினால் அதிபர் மற்றும் மகிந்தவுக்கு இடையில் அரசியல் கூட்டணியை வலுப்படுத்தி கொள்ள முடியும் என அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். 

ஸ்ரீலங்கா சுதந்திரா கட்சி உறுப்பினர்கள் அதிபரை புறக்கணித்து தனிமைப்படுத்துவதை தவிர்க்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக ஆலோசகர் குறிப்பிட்டுள்ளார்.

பின்செல்

இலங்கைச் செய்திகள்

img
அதிபர் வேட்பாளர் விரைவில் அறிவிப்பு

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின்

மேலும்
img
பதவி விலகப் போவதாக தேர்தல் ஆணைக்குழு தலைவர் எச்சரிக்கை 

முதலில் மாகாண சபைத் தேர்தல்களை நடத்த வேண்டியது

மேலும்
img
அதிபரும் விசாரணைகளுக்காக அழைக்கப்படுவார் 

வரும் நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் சாட்சியமளிப்பதற்கு

மேலும்
img
இலங்கை தாக்குதலுக்கு காரணம் ராஜபக்சே தான்- அமைச்சர் பரபரப்பு பேச்சு

இந்த தாக்குதல்களுக்கு கரணம் ராஜபக்சே சகோதரர்கள்

மேலும்
img
இலங்கையில் 4 ஆயிரம் பெண்களுக்கு  கட்டாய கருத்தடை அறுவை சிகிச்சை!

- மருத்துவர் கைது

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img