கொழும்பு,
இலங்கை அதிபர் சிறிசேனா நாடாளுமன்றத்தை கலைத்தது செல்லாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தெரிவித்துள்ளார். இலங்கை அதிபர் சிறிசேனா வுக்கும் பிரதமர் ரணில் விக்ரம சிங்கேவுக்கும் இடையே பனிப்போர் நிலவியது. அதன் காரண மாக ரணில் விக்ரமசிங்கேவை பிரதமர் பதவியில் இருந்து அதி பர் சிறிசேனா அதிரடியாக நீக்கி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்நிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் கூட்டணி கட்சியான இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் அதிபர் சிறிசேனாவின் முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் போவதாக அறிவித்துள்ளது. அதே கருத்தைதான் அனைத்து சிலோன் மக்கள் காங்கிரசும் தெரிவித்துள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பும் அதிபர் சிறிசேனாவின் நடவடிக் கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடர இருப்பதாக அறி வித்துள்ளது. அதுகுறித்து அக் கட்சியின் தலைவர் சம்பந்தன் கூறியதாவது:-
நாடாளுமன்றத்தை ஒத்தி வைக்கவும் கலைக்கவும் அதிப ருக்கு அதிகாரம் இருந்தது. ஆனால் 19ஆவது திருத்தச் சட்டத்தின் வழி அது நீக்கப்பட்டு விட்டது. நாடாளுமன்றத்தை அதிபர் கலைப்பதாக இருந்தால் 4 ஆண்டுகளுக்குப் பின்னரே கலைக்க முடியும்.
அதிபர் சிறிசேனா தன்னிச் சையாகத்தான் எடுத்த முடிவு படுதோல்வி அடைய போகின் றது என்ற அச்சத்தாலே நாடாளு மன்றத்தை கலைத்துள்ளார். நாட்டு மக்களுக்கு மட்டுமின்றி சர்வதேச சமூகத்துக்கும் இந்த உண்மை தெரியும். நாடாளுமன் றக் கலைப்புக்கு எதிராக நீதிமன் றத்தை நாடினா லும் கூட அதற்கு சாதகமான முடிவு கிடைக்காது என்று பல சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத
மேலும்அங்கஜன் இராமநாதன் கோரிக்கை
மேலும்ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால
மேலும்அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்
மேலும்