img
img

பிரதமர் வேட்பாளராக களமிறங்கும் ரணிலின் மனைவி
திங்கள் 12 நவம்பர் 2018 13:53:56

img

கொழும்பு, 

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில் பிரதமர் வேட்பாளராக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கேவின் மனைவியான மைத்ரி விக்ரமசிங்கே களமிறக்கப்படவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. இந்த யோசனையை கட்சியின் மூத்த உறுப்பினர்கள் சிலர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இலங்கை அரசு தலைவரால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு அடுத்த பொதுத் தேர்தலுக்கான நாளாக  வரும் ஜனவரி மாதம் 5-ஆம் தேதி குறிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஒவ்வொரு கட்சியும் தமது தேர்தல் செயற்பாடுகளுக்காக மும்முரமான முறையில் தயாராகி வருகின்றன. ஐக்கிய தேசியக் கட்சி எவ்வாறாவது வரும் தேர்தலின் மூலம் ஆட்சியைக் கைப்பற்றிவிடவேண்டும் என்ற கடும் நிர்ப்பந்தத்திற்கு ஆளாகியுள்ளது. 

இந்த நிலையில் ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக மக்களின் ஆதரவு பெறக்கூடிய ஒருவரை பிரதமர் வேட்பாளராக களமிறக்கும் பணிகள் தீவிரமடைந்து வருகின்றன. இதன்படியே ரணில் விக்ரமசிங்கேவின் மனைவியான மைத்திரி விக்ரமசிங்கே களமிறக்கப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

இதுவரை அரசியலில் வெளிப்படையாக களமிறங்காத ஒரு நபராக இருந்துவரும் மைத்திரி விக்ரமசிங்கே இம்முறை தேர்தலில் களமிறக்கப்பட்டால் கணிசமானளவு மக்கள் ஆதரவினைப் பெறமுடியும் என ஐ.தே.கவின் மூத்த ஊறுப்பினர்கள் கருதுகின்றனர்.

அத்துடன் களனிப் பல்கலைக்கழகத்தின் ஆங்கிலத்துறைப் பேராசிரியராக மைத்திரி விக்ரமசிங்கே விளங்குவதால் கல்விப்புலம் சார்ந்த ஆதரவும் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதேவேளை, முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க அரசியல் சார்பில்லாத ஒருவராக இருந்து பின்னர் பண்டார நாயக்கவால் அரசியலுக்கு கொண்டுவரப்பட்டு உலகின் முதல் பெண் பிரதார் எனும் பலம்பொருந்திய பதவிக்கு வந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.



பின்செல்

இலங்கைச் செய்திகள்

img
இலங்கையில் பொதுமக்களுடன் சேர்ந்து அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள் தீவிர போராட்டம்!

இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத

மேலும்
img
சுதந்திர தினத்தன்று தேசிய கீதம் தமிழ்மொழியிலும் இசைக்கப்பட வேண்டும்

அங்கஜன் இராமநாதன் கோரிக்கை

மேலும்
img
மைத்திரிபால ஸ்ரீசேனவின் அதிரடி அறிவிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால

மேலும்
img
கோத்தபாயவின் அரசாங்கம் சமமான பாதுகாப்பு வழங்குவதாகத் தெரிவிப்பு

அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்

மேலும்
img
அதிபர் வேட்பாளர் விரைவில் அறிவிப்பு

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின்

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img