பாக்தாத்,
ஈராக்கில் பயங்கரவாதிகள் நடத்திய தொடர் குண்டு வெடிப்பு தாக்குதலில் ராணுவ வீரர் உள்பட 6 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.ஈராக் தலைநகர் பாக்தாத்தில் ஷியா பிரிவினர் அதிகம் வாழும் பகுதிகளை குறிவைத்து பயங்கரவாதிகள் தொடர் குண்டு வெடிப்புகளை நிகழ்த்தினர்.
பாக்தாத்தின் வடக்குப் பகுதியில் உள்ள ஏடன் நகரில் பஸ் நிலையத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 2 பேர் உடல் சிதறி உயிர் இழந்தனர். மேலும் 6 பேர் பலத்த காயம் அடைந்தனர். அதே போல் தர்மியா என்கிற நகரில் ராணுவ வீரர்களின் அணிவகுப்பின் போது குண்டு வெடித்தது. இதில் ஒரு ராணுவ வீரர் பரிதாபமாக இறந்தார். 2 வீரர்கள் படுகாயம் அடைந்தனர். அல்-சாகா நகரில் அரசு ஊழியர் ஒருவரின் காரில் பயங்கரவாதிகள் வெடிகுண்டு வைத்தனர். இதை அறியாமல் அவர் அந்த காரில் பயணித்த போது குண்டு வெடித்து சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.
சர்தார் நகரில் நடந்த குண்டு வெடிப்பில் 2 பேர் கொல்லப்பட்டனர். 4 பேர் படுகாயம் அடைந்தனர். அதே போல் பாக்தாத்தின் வடகிழக்குப் பகுதியில் அடுத்தடுத்து 2 பஸ்களில் குண்டு வெடித்ததில் 7 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களுக்கு எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் உடனடியாக பொறுப்பு ஏற்கவில்லை.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்