ஜெனீவா,
சுற்றுச்சூழல் விழிப்புணர்வால் ஓசோன் படலம் பாதிப்பில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு வருகிறது என ஐ.நா.சபை தெரிவித்துள்ளது. காற்றில் ஏற்பட்ட சுற்றுச்சூழல் மாசு காரணமாக ஓசோன் படலத்தில் ஓட்டை விழுந்து விட்டது. இதனால் சூரியனில் இருந்து வெளியாகும் நச்சுக் கதிர்களால் புற்றுநோய் போன்றவை ஏற்பட்டு மனித குலம் பெரும் பாதிப்படைந்து வருகிறது.
மேலும் பருவநிலை மாற்றத்துடன் பேரழிவுகளும் ஏற்படுகின்றன. எனவே கடந்த 1986ஆம் ஆண்டு முதல் நச்சு வாயுவை உருவாக்கும் ரசாயன பொருட்களுக்கு தடைவிதிக்கப்பட்டது. அதன் மூலம் ஓசோன் படலம் மேலும் பாதிக்கப்படையாமல் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதில் பொதுமக்களும் அதிக அளவில் விழிப்புணர்வுடன் உள்ளனர். அதனால் ஓசோன் படலம் பாதிப்பில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு வருகிறது. இந்த நிலை தொடர்ந்தால் பழுதடைந்த ஓட்டை விழுந்த நிலையில் இருக்கும் ஓசோன் படலம் விரைவில் சீரடையும் என ஐ.நா.சபை தெரிவித்துள்ளது.
ஐ.நா.சபையின் சுற்றுச்சூழல் கண்காணிப்பு குழு 4 ஆண்டுகளாக ஆய்வு நடத்தி சமீபத்தில் அறிக்கை வெளியிட்டது. அதில் அண்டார்டிகா பகுதியில் ஓசோன் படலத்தில் ஏற்பட்டுள்ள ஓட்டை மெல்ல மெல்ல மூடி சீரடைந்து வருகிறது. இதேநிலை தொடர்ந்தால் வருகிற 2060ஆம் ஆண்டில் கடந்த 1980ஆம் ஆண்டில் இருந்தது போன்ற பழைய நிலை ஏற்பட்டு விடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் ரசாயனங்கள் குறிப்பாக குளோரோ புளோரோ கார்பன்களை தடை செய்ததால் தான் இத்தகைய முன்னேற்றமான நிலை ஏற்பட்டுள்ளது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்