லிமா,
பெரு நாட்டில் பயணிகள் பேருந்து மீது லோரி மோதிய விபத்தில் 18 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியது. பெரு நாட்டில் புனோ பகுதியில் டிடி காகா ஏரி அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் பயணிகள் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த பகுதியில் வந்த லோரி அப்பேருந்து மீது வேகமாக மோதியது.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 18 பேர் உயிரிழந்தனர். இதில் ஒரு குழந்தையுடன் 12 பெண்களும் அடங்குவர். மேலும் 39 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் போக்குவரத்தை சரிசெய்தனர். விபத்து தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டனர். பயணிகள் பேருந்து மீது லோரி மோதிய விபத்தில் 18 பேர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்