வாஷிங்டன்,
சவூதி அரேபியாவில் மாயமான பத்திரிகையாளர் கொலை செய்யப்பட்டிருந்தால் அதற்கான விளைவுகளை அந்நாடு சந்திக்கும் என அமெரிக்கா அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். சவூதி மன்னர் சல்மானின் முடியாட்சியை பற்றி கடுமையாக விமர்சித்து வந்தவர், அந்த நாட்டின் பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி (59). சமீபத்தில் இஸ்தான்புல் நகரில் உள்ள சவூதி அரேபிய துணை தூதரகத்துக்கு கடந்த 2ஆம் தேதி சென்ற அவர், மாயமானார்.
அவர் அந்த தூதரகத்துக்குள் வைத்து சவூதி அரேபிய ஏஜெண்டுகளால் கொல்லப்பட்டுவிட்டார் என்று பல தரப்பிலும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால் இந்தக் குற்றச்சாட்டை இதுவரை சவூதி அரேபியா மறுத்து வருகிறது. இது ஆதாரமற்றது; தவறானது என அந்த நாடு திட்டவட்டமாகக் கூறுகிறது.
பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி சவுதி அரேபியாவால் கொலை செய்யப்பட்டிருந்தால், அந்த நாட்டின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என டிரம்ப் எச்சரித்தார்.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்