பாரிஸ், அக்.13-
ஐரோப்பிய பண்ணைகளில் விலங்குகளைக் கூண்டில் அடைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பிரபல கவர்ச்சி நடிகை ஒருவர் தன்னையே கூண்டில் அடைத்துக் கொண்ட சம்பவம் பாரிஸில் நடந்தேறியது. பாரிஸில் நடைபெற்ற விலங்குகள் நல ஆர்வலர்கள் நடத்திய போராட்டம் ஒன்றில் கலந்து கொண்ட பே வாட்ச் புகழ் கவர்ச்சி நடிகை பமீலா ஆண்டர்சன் போராட்டத்தில் பங்கேற்ற மற்றவர்களுடன் இணைந்து தன்னையே கூண்டில் அடைத்துக் கொண்டார்.
விலங்குகளை கூண்டில் அடைக்கும் செயலுக்கு ஒரு முடிவு கட்டுவதற்கு ஆதரவாக ஏழு ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளில் ஒரு மில்லியன் கையெழுத்துகளை பெறும் நோக்கில் பிரபல விலங்குகள் நல அமைப்பு ஒன்று நடத்தும் போராட்டங்களுக்கு பமீலா ஆதரவு அளித்துள்ளார்.
மனிதர்களை மகிழ்விப்பதற்காகவோ நமக்கு உணவையோ உடையையோ தருவதற்காகவோ எந்த ஒரு விலங்கும் கூண்டில் அடைக்கப்படக்கூடாது என தான் எண்ணுவதாக பமீலா தெரிவித்துள்ளார். ஓராண்டுக்குள் இந்த பிரச்சாரத்தை முன்வைக்கும் கூட்டத்தார் ஒரு மில்லியன் கையெழுத்துகளைப் பெற்று விட்டால் அது தொடர்பாக ஐரோப்பிய கமிஷன் ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்