மாஸ்கோ, அக்.13-
ரஷ்யாவில் தன்னுடைய பாதுகாப்பில் இருந்த 13 வயதிற்குட்பட்ட சிறுமிகளை 900க்கும் அதிகமான முறை பாலியல் துஷ்பிரயோகம் செய்த கொடூரனை வரலாற்றிலேயே மோசமான ஒரு குற்றவாளி என நீதிமன்றம் கூறியிருக்கிறது.
ரஷ்யாவைச் சேர்ந்த விக்டர் லிஷாவ்ஸ்கி - ஓல்கா தம்பதியருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். மேலும் இந்த தம்பதியர் ஒன்பதுக்கும் அதிகமான சிறுவர்-சிறுமிகளை தத்தெடுத்து வளர்த்து வருகின்றனர். இவர்களுக்கு மாநில அரசின் சார்பில் மாதம் தோறும் 265 பவுண்டுகள் நிதியாக வழங்கப்படுகிறது. காலணி கடை ஒன்றினை நடத்தி வந்த விக்டர், தான் வளர்த்த 12 முதல் 17 வயது வரை உள்ள சிறுமிகளை ஐந்து ஆண்டுகளாக பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்துள்ளார்.
ஒரு கட்டத்தில் இந்த சம்பவம் குறித்து சிறுமி, ஓல்காவிடம் கூறியுள்ளார். இதனையடுத்து ஓல்கா உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் குற்றவாளி விக்டரை கைது செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து கூறிய ஓல்கா ஐந்து ஆண்டுகளாக எனக்கு தெரியாமலேயே இந்த சம்பவம் நடந்து வந்துள்ளது. இதுகுறித்து எந்த சிறுமியும் என்னிடம் கூறவில்லை. ஏனெனில் அனைவருமே அவரை தங்களுடைய தந்தையாகவே கருதி வந்தனர் என தெரிவித்தார்.
இந்த நிலையில் குற்றவாளி விக்டரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்பொழுது குற்றவாளி சிறுமிகளை கொடுமைப்படுத்தி தன்னுடைய பாலியல் அடிமைகளாக 900-க்கும் மேற்பட்ட முறை பயன்படுத்தியிருப்பது தெரிய வந்தது. ரஷ்ய நாட்டின் வரலாற்றிலேயே விக்டர்தான் மோசமான ஒரு குற்றவாளி என தெரிவித்த நீதிபதி, அவனுக்கு 22 ஆண்டுகள் 6 மாதம் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்