டோடோமா,
தான்சானியா நாட்டின் பெரும் பணக்காரரான முகமது டியூஜி மர்ம நபர்களால் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான தான்சானியாவைச் சேர்ந்த இளம் கோடீஸ்வர் முகமது டியூஜி. இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரான இவரது சொத்து மதிப்பு சுமார் வெ. 6,000 கோடி ஆகும்.
விவசாயம், போக்குவரத்து, உணவு, உடைகள், மதுபானங்கள் மற்றும் சமையல் எண்ணெய் உற்பத்தி போன்ற பல்வேறு தொழில்களை ஆப்பிரிக்கா முழு மைக்கும் இவர் நடத்தி வருகிறார். போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட ஆப்பிரிக்க பணக்காரர்கள் பட்டியலில் முகமது டியூஜி 17ஆம் இடம் பிடித்திருந்தார். அந்த பத்திரிக்கை ஆப்பிரிக்காவில் இளம் கோடீஸ்வரர் என இவரை புகழ்ந்திருந்தது.
இந்நிலையில் முகமது டியூஜி மர்ம நபர்களால் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தான்சானியாவில் உள்ள தார் இ ஸலாம் எனும் நகரில் உள்ள சொகுசு விடுதியில் இருந்து அவர் கடத்தப்பட்டதாகவும் முகமூடி அணிந்து துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டபடி வந்த கடத்த ல்காரர்களால் அவர் கடத்தி செல்லப்பட்டதாகவும் அந்நகரின் தலைமை போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தார் இ ஸலாம் ஆளுநர் கூறுகையில், சொகுசு விடுதியில் உடற்பயிற்சி முடித்துவிட்டு வெளியே வந்த அவரை துப்பாக்கி முனையில் கடத்தியுள்ளனர். 2 வாகனங்களில் கடத்தல்காரர்கள் வந்துள்ளனர். அவர்கள் வெள்ளையர்கள் என தெரிய வந்துள்ளது. இந்த சம்பவத்தின் போது முகமது டியூஜியுடன் பாதுகாவலர்கள் யாரும் இல்லை.
இது தொடர்பாக சந்தேகிக்கப்படும் நபர்கள் சிலரை ஏற்கெனவே கைது செய்து விசாரித்து வருகிறோம். முகமது டியூஜியை கண்டுபிடித்து மீட்பதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெறுவதாக அவர் தெரிவித்தார்.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்