கொழும்பு,
முல்லைத்தீவு மாவட்டத்தில் படையினர் வசமிருந்த 10 ஆயிரம் ஏக்கர் நிலங்களில் இதுவரை 3,000 ஏக்கர் நிலங்கள் மட்டுமே விடுவிக்கப்பட்டிருப்பதாக மாவட்டச் செயலகம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் பூர்வீகமாக வாழ்ந்த சொந்த நிலங்களில் இருந்து 1983ஆம் ஆண்டிற்குப் பிறகு ஏற்பட்ட வன்முறைகளால் தமிழர்கள் வெளியேற்றப்பட்டனர்.
போர் நிறைவடைந்து மக்கள் மீண்டும் குடியேற அனுமதிக்கப்பட்டு ஒன்பது ஆண்டுகள் நிறைவடைந்தும் தமிழ் மக்களுக்குச் சொந்தமான பூர்வீக நில ங்கள் பல இதுவரை விடுவிக்கப்படவில்லை.
இந்த மாவட்டத்தில் அபகரிக்கப்பட்ட நிலங்களை அரசு சார்ந்த நிறுவனங்களே ஆக்கிரமித்து வருகின்றன. முல்லைத்தீவு மாவட்டத்தின் வெலிஓயா தவிர்த்து இதர ஐந்து மாவட்டத்தில் உள்ள ஏழாயிரம் ஏக்கர் நிலங்கள் ராணுவப் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. எனினும் 3 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் மட்டுமே தமிழ் மக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் எஞ்சிய 7 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் ராணுவப் படையினர் கட்டுப்பாட்டி லிருந்து வருவதாக மாவட்டச் செயலகம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத
மேலும்அங்கஜன் இராமநாதன் கோரிக்கை
மேலும்ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால
மேலும்அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்
மேலும்