வாஷிங்டன்,
அமெரிக்காவின் அணுசக்தி பிரிவு தலைவர் பதவிக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் அதிகாரி ரீத்தா பரன்வாலின் பெயரை டிரம்ப் பரிந்து ரைத்துள்ளார்.அமெரிக்காவின் அதிநவீன அணு உலைகளின் மேம்பாட்டுக்கான புதிய சட்டம் ஒன்றில் அதிபர் டிரம்ப், கடந்த வாரம் கையெழுத்திட்டார். இதன் தொடர்ச்சியாக அமெரிக்காவின் எரிசக்தி துறையின் கீழ் உள்ள அணுசக்தி பிரிவுக்குப் புதிய தலைவர் தேர்வு நடக்கிறது.
இந்த பதவிக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் அதிகாரி ரீத்தா பரன்வாலின் பெயரை டிரம்ப் பரிந்துரைத்துள்ளார். இவரை செனட் உறுப்பினர்கள் ஓட்டுப்போட்டு தேர்வு செய்வார்கள்.
இதில் அவரது நியமனம் உறுதியானால் அமெரிக்காவின் அணுசக்தி தொழில்நுட்ப ஆய்வு மேம்பாடு மற்றும் நிர்வாகத்துக்கு ரீத்தாவே பொறுப்பாவார் என வெள்ளை மாளிகை செய்தி வெளியிட்டு உள்ளது. இவர் தற்போது அமெரிக்க அணுசக்தி துறையில் விரைவான கண்டுபிடிப்புக்கான திட்டத்தின் இயக்குன ராக பணியாற்றி வருகிறார்.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்