இந்தோனேசியாவில் கடந்த வெள்ளிகிழமை அன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் 7.5 என்ற ரிக்டர் அளவில் தாக்கியது. இதனை தொடர்ந்து சுனாமியும் சுலவேசி தீவை தாக்கியது. இந்த விபத்தில் சுமார் 800பேருக்கு மேல் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். இது மட்டும் அல்லாமல், நில நடுக்கத்தால் பல்வேறு கட்டடங்கள் பலத்த சேதமடைந்துள்ளன.
பாதிப்படைந்த மக்கள் தங்குவதற்கு வீடு இன்றியும், உணவு இன்றியும் தவிக்கின்றனர். இந்தோனேசிய அரசு மீட்புப்படையை அனுப்பி பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு வருகின்றனர். உணவில்லாதவர்களுக்கு நிவாரணம் அளித்து வருகின்றனர். ஆனால், இப்பணிகளில் தாமதம் ஏற்படுவாதால், மக்கள் பாதிக்கப்பட்ட கடைகளில் இருக்கும் தங்களுக்கு தேவையான பொருட்களை சூறையாடும் நிலை ஏற்பட்டுள்ளது. சிலர் இதை பயன்படுத்தி தங்களுக்கு தேவையில்லாத பொருட்களை திருடவும் செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், சுனாமி மற்றும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட இரண்டு லட்சம் இந்தோனேசியர்களுக்கு உடனடியாக உதவி தேவைப்படுகிறது என்று ஐக்கிய நாடுகள் சபை கேட்டுக்கொண்டுள்ளது. இயற்கை பேரிடரால் இந்தோனேசியா தாக்கப்பட்டுள்ள நிலையில் உதவிக்கரம் நீட்ட ஐநா வேண்டுகோள் விடுத்துள்ளது.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்