சமீபத்தில் காலமான தாய்லாந்தின் மன்னரை அவமதித்ததாக எழுந்த புகாரை அடுத்து பெண் ஒருவரை மன் னரின் புகைப்படத்தின் முன்பு மண்டியிட வைத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 70 ஆண்டுகளாக தாய்லாந்தில் ஆட்சியில் இருந்தவர் காலமான மன்னர் பூமிபோள் அதுல்யதேஜ். இவர் தாய்லாந்தை ஏழ்மை நிலையில் இருந்து மீட்டு வந்தது மட்டுமின்றி பல வளர்ச்சி திட்டங்களையும் கொண்டு வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த வாரம் மன்னர் பூமிபோல் காலமானர். அவரது நினைவாக ஒரு மாத காலம் தாய் லாந்தில் துக்கம் அனுசரிக்க அரசு முடிவு செய்துள்ளது. சுற்றுலாவை மட்டுமே நம்பியிருக்கும் தாய்லாந்தின் பெரும்பாலான பகுதிகள் தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது. அங்குள்ள பொதுமக்கள் கறுப்பு உடை அணிந்து துக்கம் அனுசரித்து வருகின்றனர். இதனிடையே நீண்ட ஒரு மாத காலம் துக்கம் அனுசரிப்பதால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக பொதுமக்களிடையே முணுமுணுப்பு எழுந்துள்ளது. இது மன்னரை அவமதிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. மன்னருக்கு மரியாதை செலுத்துவதாக கூறி தாய்லாந்த் மொத்தமும் கடை மற்றும் வணிக வளாகங்கள் அனைத்தும் மூடப்பட்டு காணப்படுவதால் வருவாய் இழப்பு ஏற்பட்டு, பொருளாதார மந்த நிலை ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இதுகாரணமாகவே பொதுமக்கள் குறித்த துக்க அனுசரிப்புக்கு எதிராக கருத்து கூற தொடங்கியுள்ளனர். இது அதிகாரிகளுக்கு தெரிய வரவே பெண் ஒருவரை கைது செய்துள்ளனர்.அவரை பொதுமக்கள் முன்னிலையில் காலமான மன்னரின் புகைப்படத்தின் முன்பு மண்டியிட வைத்து மன்னிப்பு கேட்க வைத்துள்ளனர். அது மட்டுமின்றி அவர் மீது வழக்கு பதிந்து விசாரணை மேற்கொள்ள இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித் துள்ளனர்.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்