அமெரிக்க நிறுவனமும் உலகின் மிகப்பெரிய சில்லறை வர்த்தகமுமான வால்மார்ட் நிறுவனம் அமெரிக்கா, பொருளாதார சரிவை சந்திக்கும் என்று அமெரிக்க வர்த்தகத்துறை அதிகாரிக்கு ஒரு கடிதத்தை எழுதி இருக்கிறது.
சில நாட்களுக்குமுன் அமெரிக்கா அரசு, சீனாவில் இருந்து இறக்குமதி செய்யும் பொருள்களுக்கு புதிதாக 200 பில்லியன் அமெரிக்கா டாலர் மதிப்பிலான கூடுதல் வரியை விதித்துள்ளது. இந்த வரி விதிப்பு செப்டெம்பர் 24 முதல் அமலுக்கு வரும் என்றும் அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்த வரி விதிப்பால் அமெரிக்கா நிறுவனங்கள் மற்றும் அமெரிக்கா பொருளாதாரம் ஆகியவை பாதிக்கும்.
அதனால் வால்மார்ட் நிறுவனம் அமெரிக்கா வர்த்தகத் துறை அதிகாரிக்கு "சீனாவில் இருந்து இறக்குமதி செய்யும் பொருள்களுக்கு வரி விதிக்கும் முறை யால் பொருளாதாரம் பாதிக்கும். குறிப்பாக அதிக அளவில் பொருட்களை தயாரிக்கும் நிறுவனம் என்ற முறையில் வால்மார்ட் நிறுவனம் அதிகம் பாதிக்க ப்படும்.
மேலும் இதனால் பொருட்களின் விலை உயரும் என்றும் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் எங்கள் வர்த்தகம், எங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் எங்கள் சப்ளயர்களும் அதிக அளவில் பாதிக்கப்படுவார்கள் என்பதால், இருநாடுகளும் இந்த வரி விதிப்புப் பிரச்சனையில் பேச்சுவார்த்தை நடத்தித் தீர்வு காண வேண்டும்" என்று ஒரு கடிதம் எழுதியுள்ளது.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்