ஜேர்மனியில் வாட்ஸ் அப்பில் பரவிய ஒரே ஒரு குறுந்தகவலை முறியடிக்க 100 பொலிஸார் அதிரடியாக குவிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஜேர்மனியின் மூனிச் நகரில் குறித்த சம்பவம் நடந்துள்ளது. கொண்டாட்ட பிரியரான 18 வயது இளைஞர் ஒருவர் தனது வாட்ஸ் அப் நண்பர்களை அனை வரையும் அழைத்து பெரு விருந்து ஒன்றை ஏற்பாடு செய்துள்ளார். விருந்து துவங்கிய சில மணி நேரங்களிலேயே கூட்டம் கட்டுக்கடங்காமல் சென்றுள்ளது. மட்டுமின்றி விருந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டவர்களின் கூச்சலால் அப்பகுதி குடியிருப்புவாசிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்த துடன் பொலிஸாருக்கும் தகவல் அளித்துள்ளனர்.இதனையடுத்து சில பொலிஸார் அடங்கிய குழு ஒன்று சம்பவ பகுதிக்கு வந்து கூட்டத்தை கட்டுப்படுத்த துவங்கியுள்ளது. ஆனால் பொலிஸாரால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. விருந்து நடந்த கட்டிடத்தின் முகப்பில் மட்டும் சுமார் 150 பேர் நின்றிருந்தனர். அவர்களை பொலிசார் அங்கிருந்து முதலில் அப்புறப்படுத்த முயன்றனர். ஆனால் அதில் சிலர் பொலிஸாரின் வாகனத்தின் மீதேறினர். இரண்டு இளைஞர்கள் இதனிடையே கூட்டத்தின் மீது முட்டையை வீசத் துவங்கியுள்ளணார். அவர்களை உடனடியாக கைது செய்து அப்புறப்படுத்திய பொலிஸார் கூட்டத்தை கலைக் கும் மட்டும் அவர்களை கைது செய்து வைத்திருந்தனர். இதனிடையே பொலிஸாரின் நடவடிக்கைக்கு எதிப்பு தெரிவித்த கும்பல் ஒன்று தெருவுக்கு வந்து வாகனங் களை மறித்து போராட்டத்தில் இறங்கியது. இது அடுத்த தெருவுக்கும் பரவியதை அடுத்து மேலும் பொலிஸார் அப்பகுதிக்கு வரவழைக்கப்பட்டனர்.நூற்றுக்கணக்கான பொலிஸார் அங்கு குவிக்கப்பட்டு குறிப்பிட்ட விருந்து நிக்ழச்சியை கலைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பெருந்துக்கு அழைப்பு விடுத்த நபர் மீது இதுவரை பொலிஸார் வழக்கு எதுவும் பதியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்