கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர் குழுவினால் ஏற்படுத்தப்படவுள்ள புதிய அரசியல் நடவடிக்கைக்கு யார் தலைமை தாங்குவது என்பது தொடர்பில் இன்னும் முரண்பாடு நிலவி வருகிறது. புதிய அரசியல் கட்சியின் தலைவர் பதவியை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு வழங்காமல், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு வழங்குவது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது வரையில் கூட்டு எதிர்க்கட்சி உருவாக்கவுள்ள புதிய அரசியல் அமைப்புக்கான நடவடிக்கைகளில் பெரும்பாலானவை நிறைவு செய்யப்பட்டுள்ளது. எனினும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த வருட இறுதியில் மேற்கொள்ளவுள்ள தீர்மானம் குறித்து அவதானத்துடன் இருந்து புதிய கட்சி மற்றும் தலைமைத்துவத்தை வெளியிடுவதற்கு அவர்கள் கலந்துரையாடல் மேற்கொண்டுள்ளனர். அதற்கமைய ஜனாதிபதியினால் எதிர்வரும் காலங்களில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தரப்பிற்கு அழைப்பு மேற்கொள்ளப்படுமா என காத்திருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் ஜனாதிபதி நடிப்பினை மாத்திரம் மேற்கொண்டிருந்தால் மஹிந்த ராஜபக்ச அதற்கமைய பதில் வழங்க வேண்டும் எனவும் அவர்களுக்குள் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேவேளை, முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச புதிய கட்சியின் அமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கின்ற நிலையில் தற்போது வரையில் மாவட்ட அமைப்பாளர்கள், தொகுதி அமைப்பாளர்கள், மற்றும் தேர்தல் தொகுதி பிரதிநிதிகளை ஆகியோரை நியமித்துள்ளார்.
இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத
மேலும்அங்கஜன் இராமநாதன் கோரிக்கை
மேலும்ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால
மேலும்அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்
மேலும்