கடந்த சில நாடகளாக அமெரிக்காவை புறட்டிபோட்ட ப்ளோரன்ஸ் புயலால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக துறைமுக நகரமான வில்மிங்டன் நகரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த புயலுக்கு சுமார் 17பேர் பலியாகியுள்ளனர். இந்த புயலால் கரோலினா உள்ளிட்ட பல மாகாணங்களில் பலத்த பாதிப்படைந்துள்ளது. இந்நிலையில், பல இடங்களில் ஆறுகளில் வெள்ளம் பெறுக்கெடுத்து ஓடுகிறது. கடந்த வெள்ளி முதல் பல இடங்களில் வரலாறூ காணாத கனமழை பெய்து உள்ளது. இதுவரி 75 செண்டிமீட்டருக்கு மேல் மழை பதிவாகியுள்ளது. அப்பகுதிகளில் வசித்துவரும் ஆயிரக்க ணக்கானோர், பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மழை பாதிப்பில் சிக்கிதவிக்கும் பொதுமக்களை மீட்கும் பணியில் மீட்புப்படையினர் ஈடுபட்டுள்ளனர். மீட்புப்பணியில் ஈடுபட்டிருக்கும் குழுவினர்களுக்கு அதிபர் டிரம்ப் ட்விட்டரில் பாராட்டு தெரிவித்துள்ளார். மீட்புப் பணிகளில் ஈடுபடுவதற்காக 13 ஆயிரத்து 500 ராணுவத்தினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. கேப் பியர் மற்றும் லிட்டில் ஆற்றங்கரைகளில் வசித்துவரும் 7,500 பேர் உடனடியாக வெளியேற அறிவறுத்தப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்