வாஷிங்டன்: கடந்த 7 ஆண்டுகளில் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் அமெரிக்காவில் குடியுரிமை பெற்று அங்கு குடியேறியுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்களை வெளியிட்ட அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு வாரியம் இந்த தகவலை தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் குடியுரிமை பெற்று குடியேறும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகையில் தற்போது 14 சதவீதம் பேர் இந்தியர்களாக உள்ளனர் என்றும் தெரித்துள்ளனர்.
மேலும் அமெரிக்காவில் வாழும் மக்களில் ஏழு அமெரிக்கக்கர்களில் ஒருவர் வெளிநாட்டில் பிறந்தவராக உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிற்கு அடுத்தபடியாக சீனாவில் இருந்தும் ஏராளமானோர் அமெரிக்காவில் குடியேறி வருகின்றனர். சுமார் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட சீனர்கள் கடந்த 7 ஆண்டுகளில் அமெரிக்காவில் குடியேறியுள்ளனர் என்று ஆய்வில் தெரித்துள்ளனர்.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்