img
img

நாடு திரும்பும் அகதிகளுக்கு 2000 பவுண்ஸ் நிதி
செவ்வாய் 18 அக்டோபர் 2016 12:45:20

img

பிரித்தானியா அகதிகள் தொடர்பான நெருக்கடியை சமாளிக்கும் நோக்கில் நாட்டை விட்டு வெளியேறும் அகதிகளுக்கு 2000 பவுண்ட்ஸ் வழங்குவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஐரோப்பிய நாடுகளை நோக்கி அகதிகள் படையெடுக்க தொடங்கியுள்ள நிலையில், பிரித்தானிய உள்ளிட்ட நாடுகள் அகதிகள் தொடர்பில் பாரிய நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது. இந்நிலையில், பிரித்தானியாவை விட்டு வெளியேற இணக்கம் தெரிவிக்கும் அகதிகளுக்கு தலா 2000 பவுண்ட்ஸ் நிதி வழங்கப்படும் என்ற தகவலை பிரித்தானிய பிரதமர் தெரேசா மே தலைமையிலான அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த விடயம் தொடர்பில் அந்நாட்டு உள்துறை அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் இது வரையான காலப்பகுதியில் அரசாங்கம் அமுல்படுத்தியுள்ள குறித்த திட்டத்தின் கீழ் 529 அகதிகள் நிதியுதவி பெற்று வந்துள்ளனர். அகதிகள் பாதுகாப்பான இடத்திற்கு செல்வதற்கோ, தொழில் வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்வதற்கோ அல்லது சொந்த நாட்டில் சுய தொழிலை ஆரம்பிப்பதற்கோ இந்த நிதி பயன்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதே வேளை கடந்த 2004 ஆம் ஆண்டில் இருந்து பிரித்தானியா அகதிகள் நெருக்கடியை எதிர்கொண்டு வருவதாக அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்செல்

இலங்கைச் செய்திகள்

img
இலங்கையில் பொதுமக்களுடன் சேர்ந்து அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள் தீவிர போராட்டம்!

இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத

மேலும்
img
சுதந்திர தினத்தன்று தேசிய கீதம் தமிழ்மொழியிலும் இசைக்கப்பட வேண்டும்

அங்கஜன் இராமநாதன் கோரிக்கை

மேலும்
img
மைத்திரிபால ஸ்ரீசேனவின் அதிரடி அறிவிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால

மேலும்
img
கோத்தபாயவின் அரசாங்கம் சமமான பாதுகாப்பு வழங்குவதாகத் தெரிவிப்பு

அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்

மேலும்
img
அதிபர் வேட்பாளர் விரைவில் அறிவிப்பு

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின்

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img