இக்கால கட்டத்தில் அருகில் இருந்தால் கூட, ஒருவர் ஒருவருடன் பேசிக்கொள்ளாமல் மொபைலையே பார்த்துகொண்டிருக்கிறொம். குழந்தைகள், பெரிய வர் என்று அனைத்துவிதமான வயதுடையவர்களும் மொபைலே கதி என்று இருக்கிறார்கள். இவ்வளவு ஏன் பெற்றோர்கள் கூட தன் குழந்தைகளுக்கு அறி வுரை தராமல் அவர்களும் மொபைலும் கையுமாக இருக்கிறார்கள்.
ஜெர்மனியைச் சேர்ந்த எமில் என்ற சிறுவனின் பெற்றோர்கள் அவனிடம் பேச நேரம் ஒதுக்காமல் மொபைலும் கையுமாக இருப்பதால், அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று 150 சிறுவர், சிறுமியர்களை அழைத்துகொண்டு பேரணி ஒன்றை நடத்தியுள்ளார். அந்த பேரணியின் முழக்கம் என்ன என்றால்,”செல்போனில் விளையாடாதீர்கள்.
அதற்குப் பதிலாக என்னுடன் விளையாடுங்கள்” என்பதுதான். செப்டம்பர் 8ஆம் தேதி நடந்த இந்த பேரணி, பலரை கவர்ந்துள்ளது. எமிலுக்கான ஆதரவு குரல்கள் பல தரப்புகளில் இருந்து கிடைத்துள்ளது. சுமார் 150 சிறுவர்கள் கலந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த பேரணியை நடத்திய எமில் ரஸ்டிக்கின் வயது எழு என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்