img
img

பாலியல் சர்ச்சையை மறைக்க பணம் கொடுத்த விவகாரம்; சிக்கிய டிரம்ப்!!
வியாழன் 23 ஆகஸ்ட் 2018 13:50:59

img

அமெரிக்காவில் அடல்ட் திரைப்படங்களில் நடிக்கும் ஷடார்லி டேனியல்ஸ் என்ற நடிகை 2016-ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்த லுக்கு முன் டிரம்பின் மீது பாலியல் குற்றம் சுமத்தியிருந்தார். அதிபர் டிரம்ப் தன்னுடன் பாலியல் உறவு கொண்டதாகவும் அதை மறைக்க தனக்கு ஒரு லட்சம் டாலர் கொடுத்ததாகவும் பகிரங்க குற்றம் சாட்டினார். ஆனால் அதிபர் தேர்தலில் டிரம்பின் நற்பெயரை கெடுக்கவே அவர் இவ்வாறு கூறினார் என சர்ச்சைகள் கிளம்பியநிலையில் டிரம்ப் வெற்றி பெற்றார்.

தேர்தல் நிதி தொடர்பான சட்டத்தை மீறி செயல்பட்டதாக ட்ரம்பின் வழக்கறிஞர் மைக்கேல் கோஹன் மீது புகார் எழுந்து உள்ளது. இது தொடர்பாக நியூயார்க் தெற்கு மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

நேற்று முன்தினம் இந்த வழக்கு விசாரணையில் ஆஜரான கோஹன் அமெரிக்க தேர்தலில் ''போட்டியிடும் வேட்பாளர் எங்களுடன் செக்ஸ் உறவு கொண்டார் இதை வெளியே சொல்வோம் என்று கூறிய இரண்டு நடிகைகளுக்கு 2 லட்சத்து 80 ஆயிரம் டாலரை கொடுத்து வாயை அடைக்க முயற்சி செய்தோம் என கூறி சட்டத்தை மீறி செயல்பட்டதாகவும் டிரம்ப் சொல்லித்தான் இதை செய்தேன்'' என ஒப்புக்கொண்டார்.

இதில் வேட்பாளர் என்று குறிப்பிட்டது அதிபர் ட்ரம்பைத்தான். இந்த வழக்கில் ட்ரம்பின் வழக்கறிஞருக்கான தண்டனை விவரத்தை வரும் டிசம்பர் 12-ஆம் தேதி நீதிபதி அறிவிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியானதை அடுத்து இந்த விவகாரம்  டிரம்ப்க்கு மேலும்  நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

பின்செல்

உலகச் செய்திகள்

img
ராணி எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்த நாள் கணக்கில் காத்துக்கிடக்கும் மக்கள்

நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்

மேலும்
img
ராணி எலிசபெத் மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவு

இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது

மேலும்
img
வெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு தசாப்தங்களில் பிறந்த இரட்டையர்கள்

வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்

மேலும்
img
பத்திகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்குத் தண்டனை

இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை

மேலும்
img
16 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்காவில் விண்வெளி படை

16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img