img
img

11 லட்சம் பெயர்களை எடுத்துக்கொண்டு சூரியனுக்கு சென்ற விண்கலம்!!
புதன் 15 ஆகஸ்ட் 2018 15:14:03

img

மனிதன் அறிவியலின் உதவியால் நிலா, செவ்வாய் கிரகம் என அனைத்திலும் தனது தொடர் முயற்சிகளின் மூலம் ஆய்வினை மேற்கொண்டு வரு கிறான். ஆனால் இந்த விண்வெளி ஆராய்ச்சி நிகழ்வுகளுக்கு சூரியன் மட்டும் விதிவிலக்கல்ல. 1970-ஆம் ஆண்டே ஹீலியம்-2 என்ற விண்க லம் சூரியனை ஆராய அனுப்பட்டது. ஆனால் அந்த விண்கலமானது சூரியனிலிருந்து சுமார் 27 மில்லியன் மைல் தூரத்திற்கு அரு கில் மட்டும்தான் சென்று ஆய்வு செய்தது.

அத்தனை தொடர்ந்து சூரியன் மற்றும் சூரியப்புயல் தொடர்பாக ஆராய நாசா திட்டமிட்டு ‘பார்க்கர் சோலார் புரோப்’ என்ற புது விண்கலத்தை நேற்று முன்தினம் அனுப்பியது  இந்த விண்கலமானது சுமார் 1,400 செல்சியஸ் வெப்பத்தையும் தாங்கி மணிக்கு சுமார் 7,25,000 கி.மீ வேகத்தில் பறக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு சூரியனிலிருந்து 40 லட்சம் மையில் தொலைவிலிருந்து இந்த விண்கலம் தொடர்ந்து 6 வருடம் 11 மாதங்கள் சூரியனை 24 முறை சுற்றிவந்து  ஆய்வு செய்யும் எனவும் நாசா அறிவித்துள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் அனுப்பப்பட்ட அந்த விண்கலத்தில் ஒரு ''மெமெரி கார்டு'' உள்ளது அந்த கார்டில் 11 லட்சத்து 37 ஆயிரத்து 202 பேரின் பெயர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது என நாசா அறிவித்துள்ளது. அதில் இடம்பெறும் பெயர்களை பரிந்துரைக்க நாசா ஏற்கனவே அறிவியல் பத்திரி கைகளில் விளம்பரம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பின்செல்

உலகச் செய்திகள்

img
ராணி எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்த நாள் கணக்கில் காத்துக்கிடக்கும் மக்கள்

நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்

மேலும்
img
ராணி எலிசபெத் மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவு

இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது

மேலும்
img
வெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு தசாப்தங்களில் பிறந்த இரட்டையர்கள்

வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்

மேலும்
img
பத்திகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்குத் தண்டனை

இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை

மேலும்
img
16 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்காவில் விண்வெளி படை

16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img