அமெரிக்கப் பெண்கள் ட்ரம்ப்புக்கு ஓட்டுப் போடக் கூடாது என வேண்டுகோள் விடுத்துள்ளார் அதிபர் ஒபாமாவின் மனைவி மிஷல் ஒபாமா. ஒபாமாவின் பதவிக்காலம் நிறைவு பெறுவதால், புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அமெரிக் காவில் நவம்பர் 8-ந் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தொழில் அதிபரும், பெரும் கோடீசுவரருமான டொனால்ட் டிரம்ப்பும், ஜனநாயக கட்சியின் சார்பில் ஹிலரி கிளிண்டனும் போட்டி யிடுகின்றனர். தற்போது அங்கு தேர்தல் பிரசாரம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி தவித்து வருகிறார். அந்த வகையில், அவர் கடந்த 2005-ம் ஆண்டு பெண்களைப் பற்றி மிக மோசமாக கருத்து தெரிவித்திருக்கிறார். அப்போது அவர் தான், பெண்களிடம் மோசமாக நடந்து கொண்டது பற்றி குறிப்பிட்டதுடன், பிரபலமாக இருக்கிறபோது ஒருவர் எதையும் செய்யலாம் என கூறி உள்ளார். இது தொடர்பாக வீடியோ வெளியானது அவருக்கு பெரும் தலைவலியாக அமைந்தது. அவர் மன்னிப்பு கேட்டபோதும், அவரது சொந்தக் கட்சியிலேயே அவருக்கு எதிராக புயல் வீசுகிறது. தற்போது தங்களிடம் டிரம்ப் தவறாக நடந்து கொண்டதாக 3 பெண்கள் குற்றம்சாட்டி உள்ளனர். ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் நடத்திய கருத்து கணிப்பில் ஹிலாரியை விட டிரம்ப் 8 சதவீத புள்ளிகள் பின்தங்கிய நிலையிலேயே உள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டிக்கான வேட்பாளரான டொனால்டு டிரம்ப் பெண்களை அவதூறாகப் பேசியதை அமெரிக்காவின் முதல் பெண்மணி மிஷல் ஒபாமா வன்மையாகக் கண்டித்துள்ளார். நியூஹாம்ஷயரில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் அவர் பேசுகையில், "டிரம்பின் செயல் நாட்டுக்கே பெரும் அவமானத்தைத் தரக் கூடியது. அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் சார்பில் போட்டியிடும் டிரம்பின் வார்த்தைகளையும் செயல்களையும் பொறுத்துக்கொள்ள முடியாது. அவரின் வார்த்தைகள் அதிர்ச்சியூட்டக்கூடியவை. தலைவர்களுக்கு நாகரீகம் அவசியம். இது வழக்கமான அரசியல் அல்ல. வாக்களிப்பது முக்கியம். அதே நேரம் டிரம்ப் போன்ற வேட்பாளர்களுக்கு எதிராகப் பெண்கள் வாக்களிக்க வேண்டும்," என்றார்.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்