அமெரிக்க படையினரால் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்ட பின்னர் அல் கொய்தா பயங்கரவாத அமைப்புக்கு அய்மன் அல் ஜவாஹரி என்பவர் தலைவராக இருந்து வருகிறார். அவருக்கு அடுத்த நிலையில் ஒசாமாவின் மகன் ஹம்சா பின்லேடன்(வயது 29) பொறுப்பு வகிப்பதாக கூறப்படுகிறது.
இரட்டை கோபுர தாக்குதலின்போது அட்டா என்பவர் விமானம் ஒன்றை கடத்திச் சென்று சர்வதேச வர்த்தக மையத்தின் வடக்கு கோபுரத்தில் தாக்குதல் நடத்தியவர் என்பதால், ஹம்சாவுக்கு அட்டா மீது கூடுதல் பிரியம் இருப்பதாக சொல்லப்படுகிறது.
அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதலில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளிகளில் ஒருவராக கருதப்படும் முஹம்மது அட்டாவின் மகளை இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ளார் ஹம்சா. இந்த சடங்கானது ஆப்கானிஸ்தானில் உள்ள ஒரு கிராமத்தில் வைத்து நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஹம்சா திருமணம் செய்துள்ள மணப்பெண்ணின் பெயர் மற்றும் தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை என்றாலும், அவர் எகிப்திய நாட்டவர் என்றும், 20 வயதுக்கு உட்பட்டவர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டில் அமெரிக்கா ஹம்சா பின்லேடனை சர்வதேச பயங்கர வாதிகள் பட்டியலில் சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் முன்பே முஷரப் இறந்துவிட்டால், அவரது
மேலும்Facebook Twitter Mail Text Size Printஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பதவி நீக்க கோரும்
மேலும்