அமெரிக்காவின் கலிபோர்னியாவிலுள்ள கேயெஸ் சாலையில் 50 வயது சீக்கியரை இரு அமெரிக்கர்கள் கடுமையாக தாக்கியுள்ளனர்.
உள்ளூர் வேட்பாளர்களின் பிரச்சார வேலைக்காக தனியாக சீக்கியர் ஒருவர் செயல்பட்டு வந்துள்ளார். அப்போது அந்த வழியே வந்த இரு வெள்ளை இன அமெரிக்கர்கள். அந்த சீக்கியரை கடுமையாக தாக்கியுள்ளனர். தொடர்ந்து, உன்னை யாரும் இங்கு வரவேற்கவில்லை, இரும்பு கம்பிகளைக்கொண்டு தலையில் தாக்கியுள்ளனர். சீக்கிய மதத்தின் பாரம்பரியமாக இருக்கும் தலை பாகையை அணிந்திருந்ததால், காயம் பலமாக ஏற்படாமல் தவிர்க்க ப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஆம்புலன்ஸ் ஒன்று வரவழைக்கப்பட்டது. அதன்பின் அந்த இடத்திலேயே அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
உலக அளவில் 5ஆவது பெரிய மதம் சீக்கியம் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் 5 லட்சம் சீக்கியர்கள் வரை வசித்துவருகின்றனர். 2018 ஆம் ஆண்டு தொடங்கியதில் இருந்து வாரம் ஒரு சீக்கியராவது தாக்கப்படுவதாக தெரிவிக்கின்றனர்.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்