img
img

இந்தோனேசியாவில் நில நடுக்கம். மலேசியர் உட்பட 10 பேர் பலி.
திங்கள் 30 ஜூலை 2018 11:53:19

img

ஜாகர்த்தா, 

பாலிக்கு அடுத்த நிலையில் மிகவும்  பிரபலமான சுற்றுலாத் தலமாக விளங்கும் லாம்போக் தீவை நேற்று, ஞாயிற்றுக்கிழமை  நிலநடுக்கம் தாக்கியது. பூமிக்கு அடியில் குறைந்த ஆழத்தில் பூகம்பம் ஏற்பட்டதால் அங்குள்ள ரிஞ்சனி மலைப் பகுதியில் பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. இந்நிலநடுக்கம் ரிக்டர் அள வில் 6.4-ஆகப் பதிவானாலும், கடுமையான  சேதம்  ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்டடங்களில் விரிசல்கள் ஏற்பட்டன. மேலும் பல கட்டடங்கள் ஆட்டம் கண்டன.   பரவலாக இந்த பூகம்பம் உணரப்பட்டுள்ளது. பூமிக்கு அடியில் 7 கி.மீ. ஆழத்திலேயே இந்த பூகம்பம் ஏற்பட்டதால் பாலி தீவு வரை இதன் தாக்கம் இருந்தது. ஆனால், பாலியில் உயிருடற் சேதங்கள் ஏற்படவில்லை.பலி எண்ணிக்கை அதிகமாகலாம் என்று அஞ்சப்படுகிறது, தரவுகள் இன்னமும் சேகரிக்கப் பட்டு வருகின்றன. ரிஞ்சனி மலையில் இந்த பூகம்பத்தினால் ஏற்பட்ட மிகப்பெரிய நிலச் சரிவின் பாதிப்புகளை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

சுமார் 10 விநாடிகள் நீடித்த இந்தப் பூகம்பத்தினால் மக்கள் வீடுகளை விட்டு அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர். சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் லாம்போக் தீவில் கண்ணைக் கவரும் இயற்கைக் காட்சிகள் உண்டு, மலைகள், கடற்கரைகள் என்று இயற்கை எழில் மின்னும் இப்பகுதியில் இந்த பூகம்பம் பெரிய பீதியைக் கிளப்பியுள்ளது.

இந்தோனேசியா, பசிபிக் நெருப்பு வளையம் என்று அழைக்கப்படும் எரிமலைகள் நிரம்பிய பகுதியாகும். இங்கு பூகம்பங்கள் சர்வ சாதாரணமாக நிகழ்வது குறிப்பிடத்தக்கது.இதுபற்றி அந்நாட்டின் பேரிடர் மீட்பு அமைப்பின் செய்தி தொடர்பு அதிகாரி நுகுரோஹோ கூறுகையில், ‘நிலநடுக்கத்தினை தொடர்ந்து அதிகாரிகள் மஞ்சள் நிற எச்சரிக்கையை (தொடக்க நிலை எச்சரிக்கை) வெளியிட்டு உள்ளனர்.  இந்த கடும் நிலநடுக்கத்திற்கு 10 பேர் பலியாகி உள்ளனர். 40 பேர் காயம் அடைந்து உள்ளனர்.  20க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்து உள்ளன’.

‘இந்த பலி எண்ணிக்கை தொடர்ந்து உயர கூடும் என தெரிகிறது.  ஏனெனில் நிலநடுக்கம் பற்றிய சேகரிக்கப்பட்ட விவரங்கள் தெரியவரவில்லை’ என கூறியுள்ளார்.  எனினும், இதுவரை சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.இந்தோனேசியாவின் சுமத்ரா பகுதியில் கடந்த 2004-ஆம் ஆண்டு டிசம்பரில் ஏற்பட்ட 9.1 என்ற அளவிலான கடும் நிலநடுக்கத்தினை அடுத்து சுனாமி ஏற்பட்டது.  இதனால் பல்வேறு நாடுகளிலும் 2 லட்சத்து 30 ஆயிரம் பேர் பலியாகினர்.

பின்செல்

உலகச் செய்திகள்

img
ராணி எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்த நாள் கணக்கில் காத்துக்கிடக்கும் மக்கள்

நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்

மேலும்
img
ராணி எலிசபெத் மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவு

இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது

மேலும்
img
வெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு தசாப்தங்களில் பிறந்த இரட்டையர்கள்

வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்

மேலும்
img
பத்திகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்குத் தண்டனை

இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை

மேலும்
img
16 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்காவில் விண்வெளி படை

16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img