பாகிஸ்தானில் ஜூலை 25-ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தலும் பஞ்சாப், சிந்து, கைபர் பக்துங்வா, பலுசிஸ்தான் மாகாண சட்டசபை தேர்தலும் ஒரே நேரத்தில் நடைபெற்றது. இந்த தேர்தலில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில் அந்த கட்சியின் தலைவர் இம்ரான்கான்தான் அடுத்த பிதாமர் என்பது 95 சதவிகிதம் உறுதியான நிலையில் இம்ரான்கான் பிரதமராக பதவியேற்கும் பதவியேற்பு விழா முயற்சிகள் நடந்து வருவதாக செய்திகள் வந்துள்ளன.
பாகிஸ்தானில் தேர்தலுக்கு முன்ப நடந்த மனித வெடிகுண்டு சம்பவதில் 70 பேர் பலியாகினர். மேலும் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களில் 54 பேர் தொடர்ந்து பலியாகி பலி எண்ணிக்கை 124 ஆக இருந்தது. இறுதியில் பலி எண்ணிக்கை 133-ஐ தொட்டது இப்படி தேர்தலுக்கு முன்னரே பல தீவிரவாத சம்பவங்கள் நடைபெற்று பரபரப்பாக்கியது.
இந்தநிலையில், பலத்த ராணுவ பாதுகாப்புகளுடன் மொத்தம் 272 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் சட்டமன்ற தொகுதிளுக்கும் தேர்தல் முடிந்த பின் வாக்கு எண்ணிக்கையும் தொடங்கியது. தனி பெருபான்மைக்கு 130 இடங்கள் தேவை என்ற போதில் 119 இடங்களில் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி முன்னிலையில் இருந்துவருகிறது.
ஆனால் ஆரம்பத்தில் ஏற்பட்டதொழில்நுட்ப கோளாறு காரணமாக தேர்தல் முடிவுகள் வெளியிடுவது தாமதமானது. பிறகு வெளியிடப்பட்ட முடிவு களில் தொடர்ந்து இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி பல இடங்களில் முன்னிலை வகித்துள்ளது. அக்கட்சி 119 இடங்களிலும், நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் 56 இடங்களிலும், பிலாவல் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி 34 இடங்களிலும் முன்னிலையில் இருக்கின்றன. இஸ்லாமாபாத் தொகுதியில் நின்ற இம்ரான்கான் 92 ஆயிரத்து 891 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.
இதனால் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியே ஆட்சியை பிடிக்க போவது உறுதி அடுத்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்தான் என அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிவருகிறது.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்