ஸ்வெய்டா:
சிரியாவில் ஸ்வெய்டா நகரில் தற்கொலைப் படையினர் நடத்திய தாக்குதலில் 32 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிரியாவின் தெற்கு பகுதியில் உள்ள ஸ்வெய்டாவில் உள்ள பரபரப்பான சந்தைப் பகுதியில் தற்கொலைப் படையை சேர்ந்த தீவிரவாதி ஒருவன் தமது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தான். இதில் 32 பேர் பலியானதோடு, 30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். தற்கொலைப் படையைச் சேர்ந்த மேலும் இருவர் தங்களது உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்கச் செய்யும் முன்பாக பாதுகாப்புப் படையினர் அவர்களை துரத்திச் சென்று சுட்டுக் கொன்றனர்.
சிரியாவில் பல்வேறு கிளர்ச்சியாளர்களுக்கும், அரசு படைகளுக்கும் இடையே கடந்த 2011-ம் ஆண்டு முதல் உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. கிளர்ச்சி யாளர்களுக்கு அமெரிக்கா ஆதரவாக இருந்து வருகிறது. அதே நேரத்தில் சிரியா அரசுக்கு ரஷியா மற்றும் ஈரான் நாடுகள் ஆதரவாக உள்ளன. சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த பல்வேறு பகுதிகளை அரசு படையினர் மீட்டு வருகின்றனர். இந்த தொடர் தற்கொலைப்படை தாக்குதல் சம்பவங்களுக்கு ஐ.எஸ் பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்