இந்தோனேஷியாவில் பப்புவா என்னும் மாநிலத்தில் சோரங் நகரம் உள்ளது. அந்த நகரத்தில் 300 மேற்பட்ட முதலைகளை கொண்ட ஒரு பண்ணை செயல்பட்டு வருகிறது. மக்கள் குடியிருப்பு பகுதியில் இந்த முதலை பண்ணை இருப்பதால், அந்த பகுதியில் வாழும் பொது மக்கள் இதனை வேறு எங்கா வது மாற்றிவைக்க கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு 48 வயதுடைய சுக்கிட்டோ தன் கால்நடைகளை அழைத்துக்கொண்டு பண்ணை பக்கத்தில் மேய்த்து வந்துள்ளார். அப்போது ஒரு முதலை அவருடைய காலை கடித்து குதற, அவர் பயந்தடித்துக்கொண்டு ஒண்ணும்புரியாமல் பண்ணைக்குள்ளே ஓட்டிச்செ ன்றுள்ளார். பண்ணைக்குள் இருந்த மற்ற முதலைகளும் அவரை கடித்து குதற இறந்துவிட்டார்.
இதையடுத்து சுக்கிட்டோவின் உறவினர்கள் பண்ணையை வேறெடுத்துக்கு மாற்ற வேண்டும் என்றனர். முதலைகளால் இறந்த அவரின் உடலுக்கு இழப்பீடு தருகிறோம் என்று பண்ணை உரிமையாளர் ஒப்புக்கொண்டார். இன்று சுகிட்டோவின் உடலை அடக்கம் செய்த பின்னர் உறவினர்கள் எல்லாம் கத்தி, இரும்பு கம்பிகளுடன் முதல்பண்ணைக்குள் புகுந்து கண்ணில் தென்பட்ட அனைத்து முதலைகளையும் வெட்டி வீசி பழியை தீர்த்துள்ளனர்.
இச்சம்பவத்தை முதலை பண்ணை உரிமையாளர் காவலர்களிடம் புகார் அளிக்க, காவலர்கள் அந்த முதலைகளை கொன்றவர்களின் மீது கிரிமினல் வழக்கு போட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் முன்பே முஷரப் இறந்துவிட்டால், அவரது
மேலும்Facebook Twitter Mail Text Size Printஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பதவி நீக்க கோரும்
மேலும்