கலிபோர்னியாவில் 250 அடி மலைச்சரிவில் வாகன விபத்தாகி பேரிடரில் சிக்கிய பெண் ஒருவர் ஏழு நாட்களாக காரின் ரேடியேட்டர் தண்ணீரை குடித்து உயிர்வாழ்ந்த சம்பவம் ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கலிபோர்னியாவில் பிக் சர் பகுதியில் ஏஞ்செலா ஹெர்னாண்டெஸ் என்ற இளம்பெண் போலாந்திலிருக்கும் அவரது உறவினர் வீட்டிற்கு காரில் சென்று ள்ளார். மலைப்பகுதியில் சென்றுகொண்டிருந்த காரின் குறுக்கே காட்டுவிலங்குகள் வந்ததால் அவற்றின் மீது மோதாமல் இருக்க காரை திருப்பி யுள்ளார். அப்போது திடீரென்று கார் தடம்புரண்டு சுமார் 250 அடி பள்ளத்தில் கடல் பாறைகளுக்கு இடையே கார் கவிழ்ந்தது. ஆனால் இந்த சம்பவம் பற்றி அறியாத அவரது உறவினர்கள் போலீசாரிடம் புகாரளித்து தேடிவந்தனர். இந்த விபத்து நடந்து சுமார் 7 நாட்களுக்கு பிறகு அந்த கடற்கரை வழியே நடந்து சென்ற சிலர் அங்கு கார் விபத்துக்குள்ளாகி கிடந்ததை பார்த்து போலீசாருக்கு தகவலளித்தனர்.
அப்போது ஏஞ்செலா ஹெர்னாண்டெஸ் விலா எலும்புகளில் பலத்தகாயமடைந்த நிலையில் கிடந்துள்ளார். அவரை மீட்ட போலீசார் மருத்துவமனையில் சேர்த்து அவரை காப்பாற்றினர். மேலும் 7 நாட்கள் அவர் உணவில்லமால் உயிருடன் இருந்தது ஆச்சிரியம் என மருத்துவர்கள் கூறியுள்ள நிலையில் கடந்த 7 நாட்களாக காரின் ரேடியேட்டர் நீரை குடித்து உயிர் வந்ததாக அந்த இளம்பெண் கூறியுள்ளார்.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்