இங்கிலாந்து இளவரசர் வில்லியம்ஸின் மகனான நான்கு வயது ஜார்ஜ்ஜை கடந்த மாதம் தென் மேற்கு லண்டனில் உள்ள பள்ளியில் சேர்த்தனர். இந்நிலையில், இளவரசர் ஜார்ஜ்ஜை ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் கொல்ல சதி திட்டம் தீட்டப்பட்டதாக அந்நாட்டு உளவுத்துறைக்கு செய்திகள் வந்தது. இதையடுத்து, சதி திட்டம் தீட்டிய உஸ்னைன் ரஷீத் என்பவரை காவலர்கள் கைது செய்துள்ளனர்.
இவர் இங்கிலாந்தின் லங்காஷைரில் உள்ள நெல்சன் பகுதியைச் சேர்ந்தவர். கடந்த அக்டோபர் மாதம் இளவரசர் ஜார்ஜை கொல்ல தன் குழுவினருடன் சாட்டிங் செய்துள்ளார். பின்னர், அதை கண்டுபிடித்த உளவுத்துறை. ஜார்ஜுக்கு பாதுகாப்பை கூட்டியது.
இதனை தொடர்ந்து போலீசார் ரஷீத்தை கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். தீவிரவாத நடவடிக்கைகளுக்கு தயார் செய்வது மற்றும் தீவிர வாதத்தினை ஊக்குவிப்பது ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் ரஷீத்திற்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் காவலர்களின் விசாரணையில், அவர் சிரியாவுக்கு சென்று ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக போரிட இருந்ததாக கூறப்படுகிறது.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்