துருக்கியில் பயணிகள் ரயில் ஒன்று தடம்புரண்டு 23 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
துருக்கியில் வடக்கில் இஸ்தான்புல் நோக்கி சென்றுகொண்டிருந்த பயணிகள் ரயில் ஒன்று நேற்று மாலை டெகிர்டாக் பகுதியில் சரிகார் என்ற கிராம பகு தியில் தடம்புரண்டது.
மொத்தம் 376 பயணிகள் மற்றும் 6 ரயில்வே ஊழியர்களுடன் சென்று கொண்டிருந்த ரயில் திடீரென தடம்புரண்டத்தில் ரயிலின் 6 பெட்டிகள் தண்ட வாளத்தில் இருந்து தடம் விலகின. இப்படி திடீரென ஏற்பட்ட ரயில் விபத்தில் 23 பேர் பலியாகியுள்ளனர் 76 பேர் பலத்த காயம் அடைந்துள்ளனர். அங்கு நிலவிய அசாதாரண சீதோஷண நிலையே இந்த ரயில் பெட்டி தடம்புரள காரணம் என கூறப்பட்டுள்ளது.
இந்த திடீர் விபத்தால் அங்கு 100 ஆம்புலன்ஸ் மீட்பு பணிகளுக்காக குவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து துருக்கியின் துணை பிரதமர் ரெசெப் அக்தக் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்