இங்கிலாந்தில் இரண்டாம் முறையாக தம்பதி மீது நடத்தப்பட்ட விஷவாயு தாக்குதலை கண்டுபிடிக்க அதிரடியாக 100 போலீஸ் அதிகாரிகள் களம் இறக்கப்பட்டுள்ளனர்.ரஷ்ய உளவாளி என்று கருதப்பட்ட செர்ஜி ஸ்கிரிபால், அவரது மகள் யூலியா ஸ்கிரிபால் ஆகியோர் மீது கடந்த மார்ச் மாதம் விஷவாயு மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த தாக்குதலில் ரஷ்யா மீது குற்றம் சாட்டப்பட்டது. இதே போன்று, கடந்த வாரம் சாலிஸ்பரி பகுதியில் டான் சர்ஜஸ், அவரது மனைவி சார்லி ரோவ்லே ஆகியோர் இந்த விஷவாயுவால் தாக்கப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். இதனால் இங்கிலாந்து அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்த னர். நரம்பு மண்டலத்தை பாதிக்கிற நோவிசோக் என்ற மருந்து இவர்கள் இரண்டு பேர் உடலில் பரவி இருந்ததும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் இந்த மருந்தை கொண்டு வந்து கொடுத்தது யார் என்பது குழப்பமாக உள்ளது. இந்த மருந்து அடங்கிய பொருட்களை சப்ளை செய்த வர்களை கண்டுபிடிக்கும் பணி நேற்று முடுக்கி விடப்பட்டுள்ளது. மேலும், செர்ஜி மற்றும் அவருடைய மகள் மீது பயன்படுத்திய பிறகு வீசப்பட்ட விஷவாயு காலி டப்பாவால் டான் தம்பதி விஷவாயு தாக்குதலுக்கு ஆளாகி இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது. எனவே, அந்த காலி டப்பாவை சாலிஸ்பரி நகரம் முழுவதும் 100க்கும் மேற்பட்ட போலீசார் தேடி வருகின்றனர்.
இந்நிலையில், அமெஸ்பரி கிராமத்தில் இந்த நோவிசோக் மருந்தை சப்ளை செய்தது தொடர்பாக இரண்டு உள்ளூர் நபர்களை பிடித்து விசாரணை நடத்தி னர். அவர்களிடம் தகவல் சேகரிக்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. ஏனெனில், கடந்த மார்ச் மாதம் நடந்த தாக்குதலில் ஈடுபட்டவர்களே இந்த தாக்கு தலிலும் ஈடுபட்டு இருக்கலாம் என்பது இங்கிலாந்து அதிகாரிகளின் கணிப்பாக உள்ளது.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்