கொழும்பு:
இலங்கை Mattale விமான நிலையத்தை இயக்கும் பொறுப்பு இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டதாக இலங்கை நாடாளுமன்றத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.இலங்கையில் ராஜபக்சே ஆட்சியின்போது மட்டாலா என்ற இடத்தில் சர்வதேச விமான நிலையம் கட்டப்பட்டது. இது தலைநகர் கொழும்பில் இருந்து 241 கி.மீட்டர் தூரத்தில் உள்ளது. அது ராஜபக்சேவின் சொந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது. எனவே, மட்டாலா ராஜபக்சே சர்வதேச விமான நிலையம் என்று அதற்கு பெயர் சூட்டப்பட்டு 2013, மார்ச் முதல் விமான நிலையம் செயல்படத் தொடங்கியது.
போதிய அளவு பயணிகள் வராததால் விமான நிலையத்துக்கும், விமான நிறுவனங்களுக்கும் கடுமையான நஷ்டம் ஏற்பட்டது. இதனால் விமான போக்குவரத்து 2018, ஜூன் 8 முதல் முற்றிலும் நிறுத்தப்பட்டது .இந்த விமான நிலையத்தை இயக்கும் பொறுப்பை ஏற்க சர்வதேச உதவி கோரப்பட்டது. இதற்கான டெண்டர் விடப்பட்டும் யாரும் முன்வரவில்லை. ஆனால், இந்தியா மட்டும் அதற்கு விண்ணப்பித்து இருந்தது. இதையடுத்து இந்தியாவுடன் இலங்கையும் இணைந்து இந்த விமான நிலையத்தை இயக்க முடிவு செய்யப்பட்டது.
இதுதொடர்பான அறிவிப்பை இலங்கை நாடாளுமன்றத்தில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் நிர்மல் ஸ்ரீபாலா டி சில்வா வெளியிட்டார். இதற்கான இறுதி ஒப்பந்தம் தயார் செய்யப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். இதற்கு எதிர்க்கட்சி எம்பி கனக ஹெராத் எதிர்ப்பு தெரிவித்தார். அதற்கு பதில் அளித்த அமைச்சர் நிர்மல், ‘‘விமான நிலையத்தை இயக்க இந்தியா மட்டும்தான் விண்ணப்பித்தது’’ என்றார். இதனால் Mattale விமான நிலையம் இனி மேல் இந்தியாவின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்படும் என்று தெரிகிறது.
இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத
மேலும்அங்கஜன் இராமநாதன் கோரிக்கை
மேலும்ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால
மேலும்அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்
மேலும்