இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப். இவர் 1990களில் பிரதமராக இருந்தபோது ஊழல் செய்த பணத்தில் லண்டனில் 4 அடுக்குமாடி குடியிருப்புகளை இவரது குடும்பத்தினர் வாங்கியதாக தேசிய பொறுப்புடைமை அமைப்பு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் நவாஸ் ஷெரிப், அவரது மகள் மரியம், மருமகன் கேப்டன் முகமது சப்தார் ஆகியோர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நவாசும், மரியமும் லண்டனில் தங்கியுள்ளனர். அவர்கள் நேற்று நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. பாகிஸ்தான் தேர்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில் இந்த வழக்கில் நவாஸ், மரியம், மருமகன் முகமது சப்தர் ஆகியோருக்கு சிறை தண்டனை விதித்து இஸ்லாமாபாத்தில் உள்ள பாகிஸ்தான் பொறுப்புடமை அமைப்பு நீதிமன்றம் நேற்று தீர்ப்பு கூறியது.
முன்னதாக 4 முறை இந்த வழக்கில் தீர்ப்பு தேதி தள்ளி வைக்கப்பட்டது. நீதிமன்ற கதவுகளை மூடியபடி 100 பக்க தீர்ப்பை நீதிபதி முகமது பஷீர் வாசித்தார். அவரது தீர்ப்பு விவரம்:
பனாமா பேப்பர்ஸ் குற்றம்சாட்டியதன் பேரில் ஊழல் பணம் மூலம் நவாஸ் குடும்பத்தினர் லண்டனில் சொத்து குவித்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஷெரிப்புக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ. 69 கோடி அபராதமும் விதிக்கப்படுகிறது. நவாஸ் மகள் மரியத்துக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.18 கோடி அபராதமும் விதிக்கப்படுகிறது. நவாஸ் மருமகன் கேப்டன் முகமது சப்தாருக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்