அமெரிக்காவில் முதியோர் இல்லத்துக்கு தன்னை அனுப்பமுயன்ற மகனை சுட்டுக்கொன்றிருக்கிறார் ஓர் அம்மா. அமெரிக்க ஐக்கிய நாடுகளின் மாகாணங்களில் ஒன்று அரிசோனா. அதன் தலைநகரம் போனிக்ஸ். இங்கு 92 வயதான அன்னா மே பிளஸ்ஸிங் தன் 72 வயது மகன், தன் மனைவியுடன் சேர்ந்து தன்னை முதியோர் இல்லத்துக்கு அனுப்பமுயன்றதற்காக சுட்டுக்கொன்றிருக்கிறார்.
அன்னா, மகனின் மனைவியையும் குறிபார்த்திருக்கிறார். துப்பாக்கியைத் தட்டிவிட்டு தப்பிச்சென்ற அவர் நகர ஷெரிப்பிடம் புகார்செய்ய, அன்னாவை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியிருக்கிறது காவல்துறை. ஜாமீனில் அன்னாவை அனுப்ப ஐந்து லட்சம் டாலர் பிணையத் தொகை கேட்டு உத்தரவிட்டிருக்கிறாராம் நீதிபதி.
ஒருவேளை சிறைக்குப் போனபிறகு, பேசாமல் முதியோர் இல்லத்துக்கே போயிருக்கலாம் என அன்னா யோசிக்கக்கூடும்.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்