அமெரிக்காவில் சட்டத்தைமீறி குடியேறுபவர்களிடமிருந்து குழந்தைகளை பிரித்து வைக்கும் ட்ரம்பின் நடவடிக்கையை எதிர்த்து அங்கு மக்கள் போராட்டம் வலுத்துவருகிறது.
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேருபவர்களை கைது செய்யும் ட்ரம்பின் நடவடிக்கை ஏற்கனவே பல சர்ச்சைகளையும் உலக எதிர்ப்பு களை சந்தித்தது. அதாவது சட்டவிரோதமாக கைது செய்தவர்களின் குழந்தைகளை பெற்றோர்களிடமிருந்து பிரித்துவைத்ததே அந்த கடும் எதிர்ப்பிற்கு காரணம். உலக எதிர்ப்புகள் மட்டுமின்று அவரது மனைவி மெலானியாயும் குழந்தைகளை பிரித்துவைக்கும் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
அதை தொடர்ந்து டிரம்ப் குழந்தைகளை பெற்றோரிடமிருந்து பிரித்துவைக்கும் நடவடிக்கையை கைவிட்டார். சட்டவிரோதமாக குடிபுகுபவர்களையும் அவர்களது குழந்தைகளையும் ஒரே இடத்தில் வைக்க உத்தரவிட்டார். இந்த சர்ச்சைகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் படியாக டிரம்பின் போக்கு இருந்தாலும், பிரித்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் 2000 குழந்தைகள் இன்னும் பெற்றோர்களை சேரவில்லை என அறியப்படுகின்ற நிலையில் அமெரிக்காவில் டிரம்ப் நிர்வாகத்தை எதிர்த்து மக்கள் போராடிவருகின்றனர்.
சமீபத்தில் அமரிக்க முழுவதும் பல்லாயிர கணக்கோர் திரண்டு டிரம்பின் இந்த பிரித்து வைக்கும் நடவடிக்கைக்கு போர்கொடி உயர்த்தியுள்ளனர்.
வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் முன்பே முஷரப் இறந்துவிட்டால், அவரது
மேலும்Facebook Twitter Mail Text Size Printஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பதவி நீக்க கோரும்
மேலும்